முதுகுளத்தூர் அருகே விவசாயி வீட்டில் நகைகள் கொள்ளை

முதுகுளத்தூர் அருகே விவசாயி வீட்டில் நகைகள் கொள்ளை

முதுகுளத்தூர், மார்ச். 29–

முதுகுளத்தூர் அருகே உள்ள ஆவணக்குறிச்சியை சேர்ந்தவர் பால்பாண்டி, விவசாயி. தற்போது ஆடுகள் மேய்த்து வருகிறார். இவரது மனைவி சண்முகவள்ளி (வயது60), விவசாய தொழிலாளி.

நேற்று காலை கணவன்– மனைவி இருவரும் பணிக்காக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய அவர்கள் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

முதுகுளத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: , , ,

Leave a Reply