முதுகுளத்தூர்,கடலாடியில் அதிமுக பொதுக்கூட்டம்

முதுகுளத்தூர், கடலாடியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக 44 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

 முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் ஆர்.கருப்புச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தலைமைக் கழகப் பேச்சாளர் கரூர் ஏ.சுந்தரம் சிறப்புரை ஆற்றினார். மாவட்டக் கவுன்சிலர் என்.சதன்பிரபாகர் வரவேற்றார். அவைத்தலைவர் சிவராமச்சந்தின் நன்றி தெரிவித்தார்.

கடலாடிப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் என்.கே.முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ முருகன், சாயல்குடி ஒன்றியச் செயலர் அந்தோணிராஜ், ஒன்றிய இளைஞரணிச் செயலர் எம்.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் வேலுச்சாமி வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர் மணிமாறன் சிறப்புரை ஆற்றினார். ஒன்றியப் பொருளாளர் பழனி நன்றி கூறினார்.

Tags: , , ,

Leave a Reply