முதுகுளத்தூரில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

DSC02366 (1)முதுகுளத்தூரில் விலையில்லா  மடிக்கணினி வழங்கும் விழா

 

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா 02.08.2014 சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏ. காதர் முகைதீன் தலைமை வகித்தார்.  கல்விக்குழுத் தலைவர்  ஏ. ஷாஜஹான், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எஸ். சௌக்கத் அலி, தொடக்கப்பள்ளி தாளாளர் கே.பி.எஸ்.ஏ. சேட் ஜாஹிர் ஹுசைன், நர்சரி பள்ளி தாளாளர் எஸ். முஹம்மது இக்பால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாணவ, மாணவியர்க்கு விலையில்லா மடிக்கணினியினை வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அன்வர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் எம். முருகன், இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் எம். சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

உதவித் தலைமை ஆசிரியர் ஹெச்.எம். முஹம்மது சுல்தான் அலாவுதீன் நன்றியுரை நிகழ்த்தினர்.

கல்விக்குழுவினர்களும், ஜமாஅத்தார்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

 

தகவல் மற்றும் படங்கள்

முஹம்மது துல்கிஃப்லி

 

 

அரசின் திட்டங்களை பயன்படுத்தி ஏழை மாணவர்கள் தங்களின் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர்ராஜா விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் விழாவில் பேசினார்.

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 223 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் எம்.பி. அன்வர்ராஜா தலைமையில் வழங்கப்பட்டன.

அப்போது அ. அன்வர்ராஜா பேசியதாவது: மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் தமிழக முதல்வரின் திட்டங்களால் தங்களது கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பாஸ், நோட்டு புத்தகங்கள், மிதி வண்டி, சீருடைகள், கல்வி உதவித் தொகை போன்ற பல திட்டங்களை அரசு வழங்கி வருகிறது என பேசினார். விழாவில் முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம். முருகன், ஒன்றிய குழுத் தலைவர் சுதந்திரா காந்தி, பள்ளி வாசல் ஜமாத் தலைவர் ஏ. காதர்மைதீன், பள்ளித் தாளாளர் எம்.எஸ். சௌக்கத் அலி, பிரைமரி பள்ளித் தாளாளர் எஸ். முகம்மது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஓ.ஏ. முகம்மது சுலைமான் வரவேற்புரை நிகழ்த்தினார். கவுன்சிலர்கள் உடை. எம். சிவக்குமார், செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க ஒன்றியச் செயலர் சேதுபதி, ஒன்றிய இளம்பெண்கள் பாசறை செயலர் வி.கே.ஜி. முத்துராமலிங்கம், கூட்டுறவு சங்கத் தலைவர் முகம்மது ரபீக், இலக்கிய அணித் தலைவர் அம்சுராஜ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உதவித்தலைமை ஆசிரியர் எம். முகம்மது சுல்தான் அலாவுதீன் நன்றி கூறினார்.

 

 

Tags: , , ,

Leave a Reply