முதுகுளத்தூரில் புதிதாக அரசு கலைக் கல்லூரி : முதுகுளத்தூர்.காம் வாழ்த்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று முதுகுளத்தூரில் அரசு கலைக்கல்லூரி 04.07.2013 வியாழக்கிழமை முதல் செயல்பட இருக்கிறது.

இக்கல்லூரி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பட இருக்கிறது. துவக்கமாக இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ்,  பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்ஸி கணிதம், பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயன்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் துவங்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் ஜுலை 10 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன. ஜுலை 15 முதல் கல்லூரி செயல்படத் துவங்கும்.

சிறப்புக் கட்டணம் ஏதும் இல்லை.

மிகவும் பின் தங்கிய பகுதியில் உயர்கல்வி நிலையம் ஏற்படுத்தியிருப்பது முதுகுளத்தூர் மக்கள் மகிழ்வினையளிக்கிறது. இதற்காக பெரும் முயற்சி செய்த சட்டமன்ற உறுப்பினர் முருகன் அவர்களுக்கும், அனுமதி வழங்கிய அரசுக்கும், கல்வியமைச்சர், கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பழனியப்பன்

palani1முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறையின் தலைவராக முதுவை ஹிதாயத்தின் நண்பர் முனைவர் மு. பழனியப்பன் பொறுப்பேற்க இருக்கிறார்.

சிவகெங்கை அரசு கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பணிபுரிந்து வரும் அவர் இப்புதிய பொறுப்பினை ஏற்கிறார். முதுகுளத்தூர் மக்கள் அனைவரும் இப்புதிய கல்வி நிலையம் சிறப்புடன் செயல்பட மாணாக்கர்களை சேர்த்து ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒவ்வொரு பிரிவிலும் 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கின்றனர். இக்கல்லூரி தற்பொழுது அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதியில் செயல்படத் துவங்கும்.

இவரது வலைப்பூ முகவரி :

http://manidal.blogspot.ae/

தொடர்பு எண் : 9442913985

முகவரி :

1/297a பஞ்சமுக ஆனந்தவிநாயகர் கோயில்தெரு
செந்தமிழ் நகர்,
சிவகங்கை

மின்னஞ்சல் :

muppalam2006@gmail.com

 

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்

ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச்.இப்னு சிக்கந்தர் மற்றும் நிர்வாகிகள் முதுகுளத்தூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி துவங்கப்பட இருப்பதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன், முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் முதுவை ஹிதாயத் புதிய கல்லூரி துவங்குவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக !

 

 

Leave a Reply