முதுகுளத்தூரில் காங்கிரஸ் வெற்றி

முதுகுளத்தூரில் காங்கிரஸ் வெற்றி

முதுகுளத்தூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மலேசியா எஸ். பாண்டி வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், பரமக்குடி நகர் மன்ற தலைவராக இருந்தவருமான கீர்த்திகா முனியசாமியை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பரமக்குடி பகுதியில் அரசியல் செய்து வந்த இவர் உள்ளூரில் அதிமுக பிரமுகர்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டார். எனினும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாதது ஏமாற்றமே.

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மலேசியா எஸ். பாண்டிக்கு முதுகுளத்தூர்.காம்-ன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கல்வியாளர் மலேசியா எஸ்.பாண்டியன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பரமக்குடி நகர்மன்ற தலைவராக இருந்து வரும் கீர்த்திகா முனியசாமி போட்டியிட்டார். இவர்களில் மலேசியா எஸ்.பாண்டியன் 94946 வாக்குகளும், கீர்த்திகா முனியசாமி 81598 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

 கீர்த்திகா முனியசாமியை விட மலேசியா எஸ்.பாண்டியன் 13348 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 வெற்றி வேட்பாளருக்கு தொகுதி தேர்தல் அலுவலர் எஸ்.ராமையா அதற்கான சான்றிதழை வழங்கினார்.அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுகவின் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

  முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர்கள் விபரம்: பி.டி.அரசகுமார்-பா.ஜ.க (5408), கே.பஞ்சாட்சரம்-பகுஜன் சமாஜ் (1100), இருளாண்டி-பா.ம.க(1133), பி.பாலகிருஷ்ணன்- அகில இந்திய பார்வார்டு பிளாக்(1656), முகம்மது கடாபி-நாம் தமிழர் கட்சி (1993), முகம்மது இஷாக்-எஸ்.டி.பி.ஐ (2103), பி.ராஜ்குமார்-மதிமுக (8800)ஆர்.ஜேசுதாஸ்-தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்(243).சுயேச்சைகளாக 5 பேர் உள்பட 15 பேர் போட்டியிட்டனர். நோட்டாவுக்கு 1059 வாக்குகளும் கிடைத்திருந்தது.

19.05.2016

 

Tags: , ,

Leave a Reply