முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை

 

முதுகுளத்தூரில் கலப்படமும், காலாவதியான பொருட்களும் விற்பனையாவதை கண்டு கொள்ளாமல் உள்ள சுகாதரத்துறைஅதிகாரிகளால் நோய் பீதியில் பொது மக்கள் உள்ளனர். முதுகுளத்தூரில் பல்வேறு கடைகள் உள்ளன. இதில் டீக்கடை, மளிகைக்கடை, நடை பாதை வியாபார கடை, வாரம்தோறும் வியாழக்கிழமை சந்தைக்கடை என பல்வேறு கடை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதில் டீ கடைகளில், தரமற்ற டீ தூள்களை பயன்படுத்துதல், நல்ல தண்ணீர் பயன்படுத்துவது கிடையாது. இதனால் கடைகளில் குடிக்கும் டீ, தண்ணீரால் நோய் பரவும் அவல நிலை ஏற்படுகிறது.

மேலும் குளிர்பான கடைகளில் காலாவதியான குடிநீர் பாட்டில்கள், குளிர் பானங்கள் விற்கப்படுகின்றன. அழுகிய பழங்களை வைத்து பழரசம் தயார் செய்து விற்பனை, காலாவதியான தண்ணீர் பாக்கெட், தின்பண்ட பொருட்கள் அனைத்தும் காலாவதியாகி பல மாதங்கள் மற்றும் வருட கணக்கில் உள்ளதை விற்பனை செய்கின்றனர். இதனை சுகாதரத்துறை எதையும் கண்டு கொள்ளுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும் டீ கடைகளில் தரமற்ற டீ தூள்களை பயன்படுத்தி வருகின்றனர். டீ தூள்களில் புளிய முத்து தூள், மரத்தூள்களை பயன்படுத்தி உள்ளூர் கடைகளிலும், கிராமப்புற கடைகளிலும் விற்பனை கண ஜோராக நடைபெற்று வருகிறது. அதேபோல் வாரம்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் அழுகிய காய்கறிகள், பழங்கள், காலாவதியான பொருட்கள் விற்பனையா
கின்றன.

இதனை கிராமப்புற மக்கள் வாங்கி பயன்பெற்று உபயோக படுத்துவதால் நோய் பரவும் அவல நிலை ஏற்படுகிறது. இதனை சுகாதரத்துறை அதிகாரிகள், லேபர் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இது போன்று விற்பனை செய்வதை தடுக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.இதுகுறித்து பகுதி வாசிகள் கூறுகையில், ‘முதுகுளத்தூர்  அதனை சுற்றியுள்ள கிராமப்புற கடைகளிலும் சரி கலப்பட பொருட்கள், காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறது. இதனை வாங்கி பயன்படுத்துவதால் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய் பரவும் அவல நிலை ஏற்படுகிறது. இதனை சுகாதரத் துறை மற்றும் லேபர் ஆபீஸ் அதிகாரிகள் பொது மக்களை பாதிக்காத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags: , , ,

Leave a Reply