முதுகுளத்தூரில் கம்பி வலைக்குள் தலைவர்களது சிலைகள்

DSC_0115 (1)முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் வீரன் சுந்தரலிங்கனார் சிலைகள் தற்பொழுது கம்பி வலைகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

முதுகுளத்தூர் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் சாதிய வன்முறைகளை தடுக்கும் வண்ணம் காவல்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தேசத்தலைவர்களை மதிக்கிறோம். இவர்களை கௌரவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள சிலைகளின் மீது சிலர் அவமரியாதை செய்வதால் கலவரம் ஏற்பட்டு அப்பாவி மக்கள் இன்னலுக்குள்ளாகின்றனர்.

எதிர்கால தலைமுறையினர் இதனை உணர்ந்து இதுபோன்ற சிலைகள் அனைத்தையும் ஒரு பொது இடத்தில் வைத்திடவோ அல்லது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் மாவட்ட அளவிலான சிலைகள் மியூசியமாக கூட ஏற்படுத்தலாம்.

வாசகர்களே இது போன்று உங்களுக்கு ஏற்படும் கருத்துக்களை mudukulathur.com@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை இங்கு பதிவிடப்படும்.

முதுகுளத்தூர் பகுதி கலவரம் இல்லாத பகுதியாக அனைவரும் ஒருங்கிணைவோம்.

படங்கள் உதவி :

முதுகுளத்தூரிலிருந்து நமது சிறப்பு நிருபர் :

முஹம்மது துல்கிஃப்லி

 

DSC_0110 (2)

Tags: , , , ,

Leave a Reply