முதுகுளத்தூரில் அதிமுக 4 ஆண்டு சாதனை விளக்க பிரசுரம் விநியோகம்

முதுகுளத்தூரில் அதிமுகவின் நான்கு ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை மாவட்ட இளைஞரணியினர் விநியோகித்தனர்.

  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன் துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் துவங்கி, தேரிருவேலி மும்முனை சாலை, காந்தி சிலை வழியாக பேருந்து நிலையம் வரை சென்று துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

 நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. எம்.எஸ்.நிறைகுளத்தான், அவைத்தலைவர்

வி.கருப்புச்சாமி, மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்கள் கே.கர்ணன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, ஏ.எஸ்.பி அந்தோணிராஜ், ஒன்றியக்குழுத் தலைவர் சுதந்திரகாந்தி இருளாண்டி, அபிராமம் பேரூராட்சித்தலைவர் குமணன், ஜெ.பேரவை மாவட்ட பொருளாளர் எஸ்.மலைக்கண்ணன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் அழகு முத்து ,நகரச்செயலாளர் சி.தமிழ்ச்செல்வம், மாவட்ட  இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, மீனவரணி செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் தூரி.எம்.மாடசாமி நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை செய்திருந்தார்.

Tags: , , , , , ,

Leave a Reply