மாபெரும் ஷரிஅத் சட்ட பாதுகாப்பு மாநாடு

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது உண்டாகட்டுமாக.

 

நமது இந்திய தேசம் பல்வேறு மொழி, கலாச்சாரம், ஜாதி, இன, மதங்களை கொண்டதாக இருப்பினும் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் அனைவரையும் ஒன்றிணைப்பதுடன் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது சுயவிருப்பத்தின்படி ஓரு மதத்தை பின்பற்றவும் அதனை பிரசாரம் செய்யவும் உரிமையையும் வழங்கியுள்ளது.

 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையை நம் நாட்டில் அனைத்து தரப்பினரும் அவரவர் நம்பிக்கை சார்ந்து கடைப்பிடித்துவரும் சூழலில், அனைத்து தரப்பு மக்களின் இந்த உரிமையை பிடுங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு பொது குடிமையியல் சட்டத்தை திணிப்பதற்கான முதல் கட்டமாக முஸ்லிம்களின் உரிமைகளில் ஒன்றான தலாக் என்ற திருமண முறிவு சட்டத்தை முடக்குவதற்கு முனைந்துள்ளது.

 

இந்தச்சூழலில், கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மத்திய பாஜக அரசை கண்டிக்கும் விதமாக “மாபெரும் ஷரிஅத் சட்ட பாதுகாப்பு மாநாடு” வரும் நவம்பர் 6, 2016 (சனிக்கிழமை) மாலை 5 மணிமுதல் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அனைத்து இஸ்லாமிய சமூக மாநிலத் தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

 

 

ஒருங்கிணைப்பாளர்கள்

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள்,

இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும்

அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு

Ph: 90475-31838

99947-51124

94436-82628

 

Tags: , ,

Leave a Reply