மாநில கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஆக்டாவலசை பகுதியில், மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பபள்ளியில் 5ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர் வித்யாசாகர். கடந்த செப்டம்பர் மாதம் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான கேரம் போட்டியில் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். மாணவரை கௌரவிக்கும் வகையில் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் நா.கோமகன் நினைவு பரிசுகளையும் உதவி தலைமை

ஆசிரியை திருமேனிநாயகம் உதவித்தொகை வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

மாணவன் வித்யசாகர் கூறியது: நான் தோப்புவலைசை கிராமத்தில்  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன்.  உச்சிப்புளி ஆக்டாவலசை மண்டபம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு 5 ஆம் வகுப்பு  படித்தேன். இப்போது இரட்டையூரணி மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்த மாதம் திண்டுக்கல்லில் நடந்த மாவட்ட அளவிலான  கேரம் போட்டியில் வெற்றிபெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளேன்.

வருகிற டிசம்பர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற விருக்கும் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலத்திற்கான கேரம் போட்டியில் கலந்து கொள்கிறேன். அதிலும் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பேன். எந்த அடிப்படை வசதியும் இல்லாத  கிராமத்தில் பிறந்து இந்த அளவுக்கு கேரம் போட்டியில் வளர்ச்சியடைய உதவிய பள்ளி தலைமை ஆசிரியர் கோமகன், மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

 

Tags: , , , ,

Leave a Reply