மாதவம் பெற்ற வரம்

மாதவம் பெற்ற வரம்
===================

மாதராய் பூமியில் வந்து பிறந்தவர்
சாதனை செய்திடும் கல்வி கலைகளில்
நீதமாய் வென்று நிலைபெறும் வேளையே
மாதவம் பெற்ற வரம்.

சோதனை அம்புத் தொடர்ந்திடும் தாக்குதலில்
பாதமும் அங்கே பயமின்றி நிற்பதும்;
வேதமும் கூறும் வழிதனை மீறாமை
மாதவம் பெற்ற வரம்.

மோதலும் காழ்ப்புணர்வும் மொய்த்திடும் பூமியில்
சூதென சாத்தான் சுழற்றும் வலைகளில்
தீதென கண்ணில் தெரிவதில் வீழாமை
மாதவம் பெற்ற வரம்.

ஆக்கம்:
அதிரை கவியன்பன் கலாம், துபை
Kalam shaickabdul kader

Tags: ,

Leave a Reply