மவ்லானா அஹமது பஷீர் சேட் ஆலிமின் உணர்ச்சிப்பூர்வமான உரை !

லால்பேட்டையில் மன்பயீ உலமா பேரவை துவக்க விழாவில் மவ்லானா அஹமது பஷீர் சேட் ஆலிமின்             உணர்ச்சிப்பூர்வமான உரை !

 

முதுகுளத்தூர் மவ்லானா அல்ஹாஜ் அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ ஹள்ரத் அவர்கள் மன்பயீ உலமா பேரவை துவக்க விழாவில் உரையாற்றிய போது குறிப்பிட்டதாவது :-

“1916 ல் எங்களது நன்னா பார்த்திபனூர் மர்ஹூம் அல்லாமா செ.அ. முஹம்மது சுல்தான் லெப்பை ஹள்ரத் நவ்வரல்லாஹு மர்கதஹு அவர்கள், லால்பேட்டையின் தற்போதைய முதல்வர் மவ்லானா ஏ.நூருல் அமீன் ஹள்ரத் அவர்களின் தாதா அல்லாமா ஹஸனுத்தீன் ஹள்ரத் (ரஹ்) அவர்களிடம்தான் கல்வி கற்றார்கள்.

அவர்களுக்குப் பின்னர் எங்களது சிறிய மாமனார் பார்த்திபனூர் மர்ஹூம் மவ்லானா ஜியாவுத்தீன் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள் இதே லால்பேட்டையில் 1955 லும், அவர்களுக்குப் பின்னர் 1962 ல் எங்களது மாமனாரின் அருமை கடைசித் தம்பி மர்ஹூம் மவ்லானா அப்துல்லாஹ் ஹஸன் சேட் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்களும், அதற்குப் பின்னால் மர்ஹூம் மவ்லானா ஜியாவுத்தீன் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்களின் அருமைப் புதல்வர் மவ்லவீ முஹம்மது சுலைமான் மன்பயீ அவர்களும், எனது அருமை மைத்துனர் மவ்லவீ முஹம்மது முஹ்யித்தீன் மன்பயீ அவர்களும், எனது தங்கை மகனார் மவ்லவீ அப்துல் காதிர் பாஜில் மன்பயீ அவர்களும் இந்த லால்பேட்டையில் கல்வி கற்று வெளியேறியவர்களே” என்று மெத்த உருக்கத்தோடு குறிப்பிட்டார்.

அத்தோடு ….

லால்பேட்டையின் முன்னாள் முதல்வர் அல்லாமா “கைருல் மில்லத்” அப்துல்லாஹ் ஹள்ரத் கானலில்லாஹ் ரஹிமஹுல்லாஹு தஆலா அவர்களுக்கு தஞ்சையில் கண் அறுவை சிகிச்சை நடைபெற்ற போது அன்றைய நாளின் காலையில் ஃபஜ்ரு தொழுகையில் அன்னாருக்கு இமாமாக நின்று தொழ வைக்கக்கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்ததாக மிக்க பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

“இப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்றுள்ள எங்கள் மத்ரஸாவிற்கு நாங்கள் எதுவும் செய்யத் தயார்” என்று மிக்க உணர்ச்சியோடு கூறினார்.

 

மவ்லவீ ஷுஜா அஹ்மது M.A.,

 

நன்றி :

குர்ஆனின் குரல்

ஜுன் 2013

Tags: , , ,

Leave a Reply