மழை என்னும் மழலை

மழை என்னும் மழலை – கவிதை

ஓ மனிதர்களே !

 

நின்ற இடத்திலே

நிமிடப் பொழுதிலே

பனிக்குடம் உடைந்து

படக்கென்று விழுந்து

கைவிட்டுப் போனால்

கலங்காதா நெஞ்சம்?

கண்ணீரே மிஞ்சும் !!

 

காலம் காலமாய்

கர்ப்பம் தரிக்கின்ற

கார்மேகத் தாய்கள்

கணப்பொழுதில் ஈன்ற

மழை என்னும் மழலை

கண்மூடித் திறப்பதற்குள்

மண்மீது சேர்ந்ததென்று

கண்ணீரைச் சொரிகின்றன.

 

ஓ மனிதர்களே !

 

உங்களுக்குத்தான் அது மழை !

மேகங்களுக்கு அது மழலை !!

 

நினைவில் கொள்ளுங்கள்

மேகங்கள் பொழிவது

மழைநீரை மட்டுமல்ல – தங்கள்

மழலைக்கான கண்ணீரும்தான் !!

 

பிரிந்துசென்ற ம(ழை)ழலை

மீண்டும் வந்தடையப்

பூத்திருக்கிறது மேகம்

பொலிவின்றி வெளுத்து !!!

 

அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

அருப்புக்கோட்டை.
——————————————————————

எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்

எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல

எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு

எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!

—————————————————————-

எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Tags: , ,

Leave a Reply