மலேசியா கிள்ளானில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க நிகழ்ச்சி

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் (ஜெர்மனி) சிறப்புத் தலைவரும் ஆய்வுலகில் உலகளாவிய புகழ் பெற்றவருமான முனைவர் சுபாசினி அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு கீழ்க்காணுமாறு நடைபெறும்.

 

நாள்   :   18.01.2015 (ஞாயிற்றுக் கிழமை)

இடம்  :   கே. பி. எஸ். பயண நிறுவனம், கிள்ளான்.

நேரம்  :   காலை 10.30 மணி

 

உலகளாவிய தமிழர் நிலை என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத் தலைவர் ப.கு. சண்முகம் தலைமைதாங்குவார். முனைவர் முரசு நெடுமாறன் அறிமுகவுரையாற்றுவார்.

 

சிறப்புரையாற்றும் முனைவர் சுபாசினி, உலகளாவிய நிலையில் – குறிப்பாக கணினி மாநாடுகளில் பல ஆய்வுக் கட்டுரைகள் படைத்துப் புகழ் பெற்றவர்.கணையாழி இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற தமிழ்,தமிழ் இனம், தமிழ் மரபுசார்ந்த பல அமைப்புகளில் பொறுப்பு வகிப்பவர்.உலகளாவிய தமிழர் எழுச்சிக்குப் பல நிலைகளில் பாடுபட்டு வருபவர். பயனுடைய இந் நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் அன்புடன் அழைக்கிறது.

 

நிகழ்வின் இறுதியில் பகல் உணவு வழங்கப் பெறும்.

 

அன்புடன்,

 

முரசு நெடுமாறன்

துணைத் தலைவர்

மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம்

கிள்ளான்.

 

 

 

 

Tags: , , ,

Leave a Reply