மலேசியாவில் ..

(Late) Mr. M. Shanmugam & his Family (Malaysia)மலேசியாவில் … வாழும் எங்கள் சொந்தங்களைத் தேடுவதில் உதவுமாறு அன்பு வேண்டுகோள்….

அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களுக்கு…

1940களில் எனது தாத்தா ….. மா. மருதமுத்து அவர்கள் திருச்சி மாவட்டம் விராலிமலையிலிருந்து புறப்பட்டு.. சென்னை வழியாக.. கப்பலேறி.. மலேசியா சென்றடைந்தார். அங்கேயே தனது வாழ்க்கையைத் தொடர்ந்த அவர் மலேசியாவில் மெட்ரோ ரயில் என்ஜின் டிரைவராக சுமார் 25 ஆண்டு காலம் பணி புரிந்தார். அங்கேயே மலேசியத் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் முடித்து ஐந்து பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையுமாக வாழ்ந்திருந்தார்.

நான்கு பெண்களைத் திருமணம் முடித்த பின்… அவருக்கு ஏதோ சொந்தங்களை விட்டு விட்டோமே என்று தோன்ற.. ஐந்தாவது பெண்ணான எனது தாயார் .. தங்கம்மாள் அவர்களை அழைத்துக் கொண்டு பூர்வீக இடத்திற்கு வந்து .. எனது அப்பாவை திருமணம் செய்து வைக்கிறார்.

1969 வரை கடிதப் போக்குவரத்து இறந்த அவர் அதன் பின் மரணம் அடைந்ததாக தகவல் அறிந்தோம். ஆண் பிள்ளையாக பிறந்த திரு. ம.சண்முகம் .. டாக்ஸி டிரைவராக பணி புரிந்தார். அவரது குடும்பத்தாருடன் கூடிய புகைப்படம் ஒன்றே தற்போது எம்மிடம் உள்ளது. (இணைப்பில் காண்க). இவருக்குப் பிறந்த மகனுக்கு ரவிச்சந்திரன் என்கிற எனது பெயரே சூட்டப்பட்டது கடிதம் வாயிலாக பரிமாற்றம் பெற்றோம். அந்த ரவிச்சந்திரனுடன் மூன்று சகோதரிகள் பிறந்தனர்.
திரு. சண்முகம் அவர்களும் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார் என்று அறிந்தோம்.

கடைசியாக.. எங்கள் பெரியம்மா வீட்டில் இருந்துதான் 1980களில் நாங்கள் கடிதப் போக்குவரத்து கொண்டிருந்தோம். அதுவும் ஏனோ விதி வசத்தால் நின்று போனது..
கிருஷ்ணவேணி என்பவரே தனது கைப்பட எழுதிய கடிதங்கள் அவை என்பதும்.. அவர்தம் முகவரி இதோ…

MR. PARAMARAJAH

NO:3, RUMAH MURAH

RASA – 44200

SELANGUR, DARUL ESHAN

MALAYSIA

ஆண்டுகள் பல ஓடிவிட்டன.. வறுமை எங்களை ஒன்று சேர்க்க விடாமல் தடுத்து விட்டது.. இழந்த சொந்தங்களைத் தேடி என் இதயம் துடிக்கிறது.

தமிழ் பேசும் மலேசிய தொடர்புகள் அனைவருக்கும் இந்த வேண்டுகோளை பரவச் செய்யுங்கள்..

தொழில்நுட்ப வளர்ச்சி இப்போது அதிகம் இருப்பதால் .. விரைவில் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால் இது சாத்தியம் என்று முழுமையாக நம்புகிறேன்.

உங்கள் உதவிக்கு என்றென்றும் நன்றிக் கடன் செலுத்துவேன்…

என்றும் அன்புடன்….

 


கவிஞர் காவிரிமைந்தன்

நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல்,  சென்னை 600 075
தற்போது – அபுதாபி – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052

 

Tags: 

Leave a Reply