மனைவி

மனைவி

 

மாலையிட்ட  மன்னவன்

திசைமாறிச் சென்றானோ

நூல் அறுந்த பட்டமாய்

தனிமையில்  வாடுகிறேன்

 

முகப்புலன்கள் மீது கண்ணீர்

காவிரியாய் ஓடுகிறாள்

இதயவலியும் சற்றும்

குறையவில்லை

 

புரியாத உறவுகள்

புதியதாய் முளைத்து

தொட்டும் தொடரும் உறவுகள்

புரியாமல் பிரிகின்றதே

 

பாலைவனத்தைச்  சோலைவனமாக்கப்

புறப்படாயோ  மன்னவனே  இங்கு

சோலைவனம்  பாலைவனமாகும்  முன்னே

காத்திடு  என் மன்னவனே

என் மன்னவனே
ரா.நா. ஜெயராமன் ஆனந்தி

கீழப்பெரம்பலூர்   050 7258518

Tags: 

Leave a Reply