மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்

முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் நகர் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர்.    மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.முகம்மது இக்பால் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில், ராமநாதபுரத்தில் டிச.6இல் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இரு கட்சியினரும் கருப்புசட்டை அணிந்து கலந்து கொள்வது, ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து முதுகுளத்தூரை மாவட்ட தலைநகராக அறிவிக்க கோரி முதல்வர், தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுப்பது, பரமக்குடியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல இருக்கும் புதிய ரயில் தடத்தில் முதுகுளத்தூரை மையமாக வைத்து ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமுமுக நகரச் செயலாளர் ஏ.ஜபருல்லா கான் நன்றி கூறினார். தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply