சென்னையை விரைவில் மதுரை மிஞ்சும்

மதுரை : வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக மதுரை வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவ துறையில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. மும்பை, டில்லியில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சைக்கு நிகராக, மூன்றாம் தர நகரமாக கருதப்படும் மதுரை போன்ற நகரங்களிலும் நவீன மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் அளிக்கப்படுகிறது.

மதுரைக்கு வெளிநாடுகளில் இருந்தும் விமான சேவை உள்ளதால் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டினர் வருகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவுகள், இந்தோனேஷியா, இலங்கை மற்றும் அரபு நாடுகளில் இருந்து கண், இருதய சிகிச்சைக்காக அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

விமான சுற்றுலாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யும் டூர்ஸ் நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது: தற்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக பலர் மதுரை வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை கிடைப்பதாலும், உடன் வருவோருக்கும் தரமான உணவு, தங்கும் வசதிகள்

எவ்வித இடையூறும் இன்றி விரும்பும் கட்டணங்களுக்கு ஏற்ற வகையில் கிடைப்பதாலும் வருகின்றனர். வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரித்தால் சென்னையை விரைவில் மதுரை மிஞ்சும், என்றனர்

Tags: , , ,

Leave a Reply