மதுரை பல்கலை.யில் டிஜிட்டல் போட்டோகிராபிக் பயிற்சி

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவாக்கப் பணித் துறையின் சார்பில், ஒரு மாத கால சுயவேலைவாய்ப்பு டிஜிட்டல் போட்டோகிராபி சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், ஜனவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகின்றன.

இப்பயிற்சியில் சேர வயது வரம்பு கிடையாது. ஒளிப்படக் கலை தொழில்நுட்பத்தின் வரலாறு, கேமரா வகைகள், பிலிம் அமைப்பு மற்றும் பிலிம் வேகம், ஒளிப் படமெடுத்தலில் கேமராவின் பங்கு, டிஜிட்டல் கேமரா, டிஎஸ்எல்ஆர் கேமரா, மெகா பிக்சல், ரெசல்யூசன், ஒளிப்படத்தின் தரம், டிஜிட்டல் ஒளிப்படங்களில் சரியான வண்ணம், ஒளிப்பட பார்மேட்டுகள் டிஜிட்டல் ஒளிப்பட சேமிப்புக் கார்டுகள், சேமிப்புக் கார்டில் காணாமல்போன படங்களை கண்டறிதல், டிஜிட்டல் பிலிம் என்னும் டிஜிட்டல் சென்சார், ஹிஸ்டோகிராம், டிஜிட்டல் கேமரா பேட்டரிகளை பராமரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும்,போட்டோஷாப் மென்பொருள் அறிமுகம் போன்ற பயிற்சிகள் சோதனைக் கூடத்தில் வழங்கப்படும்.

மேலும் விவரங்கள் அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும், திட்ட அலுவலர்(பொறுப்பு), வயது வந்தோர் தொடர் கல்வி மற்றும் விரிவாக்கப் பணித் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அழகர்கோவில் சாலை, மதுரை-2, என்ற முகவரியை அணுக வேண்டும். தொலைபேசியில் 0452-2537838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட அலுவலர் (பொறுப்பு) எம். சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply