மதுரையில் டிச. 6ல் ஆவணப்பட விழா

மதுரை: மதுரை காந்திமியூசியத்தில் 16 வது சர்வதேச ஆவணப் பட மற்றும் குறும்பட விழா டிச., 6 முதல் 10 வரை நடக்கிறது. இந்தியப் படங்களுடன் மெக்ஸிகோ, ஸ்பெயின் உட்பட 17 நாடுகளில் தயாரான 50 படங்கள் திரையிடப்படுகின்றன.

விழா இயக்குனர் அமுதன் கூறியதாவது: இந்தியப் படங்கள், சர்வதேசப்படங்கள் என ஆறு பிரிவுகளின் கீழ் படங்கள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை திரையிடப்படும். எழுத்தாளர்கள் இப்படங்கள் குறித்து விவாதங்களில் ஈடுபடுவர். கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. நுழைவுக்கட்டணம் 100 ரூபாய். மாணவர்களுக்கு பாதி கட்டணம். ஒரு முறை கட்டணம் செலுத்தி ஐந்து நாட்களும் பார்க்கலாம். ஓவியர்களின் கண்காட்சியும் நடக்கிறது என்றார். விபரங்களுக்கு: 86952 79353.

Tags: , ,

Leave a Reply