மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை!

மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை!

புதுடெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை உள்ளிட்ட  இடங்களில் மத்திய குழு ஆய்வு நடத்தியது.

ஆய்வுக்கு பின்னர் இந்த குழு மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது. இந்நிலையில், மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: ,

Leave a Reply