மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாசீன் அறபுக்கல்லூரி

மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாசீன் அறபுக்கல்லூரி

நீங்கள் கற்றுக்கொள்பவராக இருங்கள்; அல்லது கற்றுக்கொடுப்பவராக இருங்கள்: அல்லது கற்றுக்கொள்பவருக்கும் கற்றுக்கொடுப்பவருக்கும் உதவி செய்பவராக இருங்கள் ( ஹதீஸ்)

தமிழகத்தில் தலைசிறந்த அரபுக்கல்லூரிகளில் திருச்சியில் ( திருச்சி-திண்டுக்கல் சாலையில்) அமைந்துள்ள இக்கல்லூரி ஜமாலியா செய்யிது கலீல் அவ்ன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் அவர்களால் 1994ம் வருடம் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் தலையாய நோக்கம் முஸ்லிம் மாணவர்களுக்கு தரமான மார்க்கக்கல்வி மற்றும் உலகக்கல்வியை மிகச்சிறப்பாக போதித்து அவர்களின் வருங்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வழிவகுப்பதுமற்றுமல்லாமல் அவர்களின் மறுமை வாழ்க்கைக்குத்தேவையானவைகளையும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப்படி போதிப்பதே!

இப்திதா எனப்படும் ஆரம்பக்கல்வி முதல் ஆலிம் பட்டம் பெறும் வரையிலும் உலகக்கல்வி, தொழிற்கல்வி பெறுவதும் 100% இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்விக்கட்டணம் மற்றும் மருத்துவச்செலவு அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்குவதுடன் ஷரீஅத், தவ்ஹீத், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடன் சிறப்பான இஸ்லாமிய பாடங்கள் போதிக்கப்படுகிறது.

நூலகம், விளையாட்டு மைதானம், கம்ப்யூட்டர் கல்வி மையம் மற்றும் அச்சகம் முதற்கொண்டு மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய இந்த அறபுக்கல்லூரியில் வருடந்தோரும் குர்பானி கொடுக்கப்படுகிறது, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முகாம், இலவச பொது மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.

12ம் வகுப்பில் 1083 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தவர் எமது மாணவர், மௌலவி, குலாம் காதிர் ஆலிம் யாஸீனிய் அவர்கள் தற்பொழுது சென்னையில் Software Web developer ஆக பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்து  வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோல் பல மாணவர்கள் சிறப்பான நிலையில் உள்ளனர்.

தற்பொழுது மாணவர் சேர்க்கை நடந்துகொண்டு இருக்கிறது.  மாணவர் சேர்க்கை மற்றும் ஜகாத், ஸதகா, நன்கொடை வழங்குவோர் எமது மதுரஸாவை தொடர்புக்கொள்ள வேண்டுகிறோம்:

மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி

சீத்தப்பட்டி பிரிவு, பூலாங்குலத்துப்பட்டி அஞ்சல்,

திண்டுக்கல் சாலை,  ஜே. ஜே கல்லூரி அருகில்,

திருச்சிராப்பள்ளி 620009

அலைபேசி : 9659504855, 9941057785  /  Email: jamiayaseen@gmail.com

Tags: 

Leave a Reply