பொறியியல் முதல் செமஸ்டர் தேர்வில் 68%பேர் தோல்வி

# பொறியியல் முதல் செமஸ்டர் தேர்வில் 68%பேர் தோல்வி #
+++++++++++++++++++

கடந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1000_க்கு மேல் மதிப்பெண் பெற்று அதிக கட் ஆப் மதிப்பெண் அடைந்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்த ஏராளமான பேர் முதல் செமஸ்டர் தேர்வில் ஃபெயில் ஆகியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் 570. இவற்றில் பிஇ, பிடெக் படிக்கும் மாணவர்களுக்கான முதலாவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் இப்போது வெளிவந்துள்ளன. தேர்வு எழுதிய 1,13,298 மாணவ மாணவிகளில் வெறும் 36,179 பேர் மட்டுமே பாஸ். இது 32% ஆகும். மீதியுள்ள 68% பேர் தேர்ச்சி பெறவில்லை.

கணிதத்தில் 49,288 பேரும், இயற்பியலில் 59,606 பேரும், வேதியியலில் 60,684 பேரும், மற்ற படங்களான இன்ஜினியர் டிராயிங்கில் 71,781 பேரும், தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் 91,117 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமான காரணம், பிளஸ் – 1 வகுப்பு பாடங்கள் நடத்தப்படாததே என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். இவ்ஙகுப்பில்தான் பொறுப்பியலுக்குத் தேவையான அடிப்படை தகவல்கள் உண்டாம்! அத்தோடு பொறியியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை முறையாக நடத்த ஆட்கள் இல்லை. எல்லாம் சேர்ந்து பொறியியலையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

பல லட்சங்கள் கொடுத்து தம் பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்துவிட்ட பெற்றொரில் எத்தனை பேர் செமஸ்டரில் பிள்ளை எத்தனை மார்க் வாங்கியுள்ளான் என்று கவனிக்கிறார்கள்?

Posted By Blogger to கான் பாகவி a

Tags: 

Leave a Reply