பேராசிரியர்கள் – கை நாட்டுகள் – பனிப்போர் !

திருவனந்தபுரம் பல்கலைக்கழக முன்னாள் துணை முதல்வர்,

பேராசிரியர், டாக்டர் எம்.எம். மீரான் பிள்ளை

நேர்காணல்

  இஸ்லாமிய இயக்கம் வைத்திருப்போர் 1975 லிருந்து விசுவாசமாகப் பணியாற்றுகின்றனர். இஸ்லாமிய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்யவில்லை. ஒளலியா எதிர்ப்பையே முன் வைத்தனர். “இஸ்லாமிய இலக்கியம்” என்ற வாக்கிய அமைப்பில் எனக்கு உடன்பாடில்லை. வரலாறு, இஸ்லாமிய இலக்கியத்தில் எனக்கு ஆர்வமுண்டு. மொகலாயர்கள் இஸ்லாத்திற்கு எதுவும் செய்யவில்லை. தென்னகத்தில் இஸ்லாம் வலுக்கட்டாயமாக பரவியதாகக் கூறப்படுவது தவறு. இறைநேசர்கள் வழியே இஸ்லாம் பரவியது. நவாப்புகள் ஆண்ட காலம் இருண்ட காலம் என்று எனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

உருது இலக்கியத்திற்கு செய்த சேவை போன்று தமிழுக்கு நவாப்புகள் எதுவும் செய்யவில்லை. இஸ்லாமிய இலக்கியத்துக்கு பயங்கர எதிர்ப்புள்ளது. முஸ்லிம் இலக்கியத்தை அரசு ஒதுக்குவதற்குக் காரணம் அரபுச் சொற்கள் கலப்பு. இஸ்லாமிய இலக்கியம் பொது இலக்கியம் தனித்தனியே பிரிக்கப்பட வேண்டும். இஸ்லாம் என்றவுடன் சமய விழுமியம் வந்து விடுகிறது. முஸ்லிம் பொது இலக்கியம் பொதுவாகப் பார்க்கப்படுதல் அவசியம். தமிழிலக்கியம் ஒருவகை. இஸ்லாமிய இலக்கியம் மற்றொரு வகை. அடிப்படை உள்ளவை, அல்லாதவை. முஸ்லிம் காப்பியங்கள் இஸ்லாமிய இலக்கியமல்ல. இஸ்லாமிய இலக்கிய நூற்பதிப்புக்கழகம் ஈட்டுத் தொகை மூலம் உருவாக்கப்பட வேண்டும். 50 இலட்சம் தேவைப்படும். காலப்போக்கில் ஆலமரம் போல் விரிந்து படரும். உண்மையானவர்கள் உள்ளிருந்து இயக்கணும். போலிகள், வேடதாரிகள் வெளியேற்றப்படணும். பாடல்கள் சீர் பிரிக்கப்பட்டு உரை செய்ய வேண்டும். எளிய தமிழில் கொண்டு வரணும். பி,ஹெச்.டி ‘வைவா’ விழா போல் நடத்தப்படுவது உண்மை.

 

பல நாடுகளில் ஆய்வரங்கத்தலைவர் பொறுப்பேற்றிருக்கிறேன். ஆய்வுக் கட்டுரைகளாக பதிவு செய்யப்பட்டவைகளே மீண்டும் தொகுப்பாகத் தரப்படும். சுயக்கருத்துக்கள் வெளிப்படாதது குறையே. கருத்தரங்கம் பெயரில் பார்மலிட்டிக்காக வந்து போகும் நிலையுள்ளது. சமூக அமைப்பே அப்படியிருக்கிறது.

பட்டுச் சேலைக்கடை விளம்பரம் போல் பகட்டு விழாக்கள், பட்டு விழாக்கள், இலக்கிய விழாக்கள் நடைபெறுகின்றன. “சோற்று மசலாவுக்காக ஒரு படைப்போரும்” நிகழ்ந்திருக்கிறது. வியாபாரிகள் கொடுத்த பணத்தில் உருவான கல்லூரிகள் மேனேஜ்மென்ட் பிடியில் சிக்கி கிடக்கின்றன. முஸ்லிம் பத்திரிகைகளுக்கும், கல்லூரி நிர்வாகிகளுக்குமிடையில் பெருத்த இடைவெளியுள்ளது.

முஸ்லிம் பத்திரிகைகள் 68 வெளிவருகின்றன. 100 முஸ்லிம் எழுத்தாளர் எழுதுகின்றனர். அகாடமியன்ஸ் எழுதுவதில்லை. கள ஆய்வு செய்வதில்லை என்பது சரிதான். பி.ஹெச்.டி பேராசிரியர்கள் குழுவுக்கும் மற்றும் இதர பிரிவினர், கைநாட்டு எழுத்தாளர் இவர்களுக்குமிடையில் தொடர்ந்து பனிப்போர் நிகழ்வது உண்மை. வேறுபாடு தேவையில்லை. அகாடமியன்ஸ் மற்றவர்களை இளக்காரமாகப் பார்க்க வேண்டியதில்லை. எம்.ஏ., பி.ஹெ.டிக்காக தற்செருக்குக் கூடாது. பி.எஸ்.சி விலங்கியல், எம்.ஏ. தமிழ், எம்.ஏ. வரலாறு, எம்.ஏ. அரசியல் பி.ஹெச்.டி. தமிழ்த்துறைத் தலைவர், துணை முதல்வர் 40 ஆண்டுகள் கல்லூரிப் பணியிலிருந்து என்னையே நீண்ட காலம் ஒதுக்கி வைத்திருந்தனர்.

சமூகத்தின் உண்மையான எழுத்தாளர்கள் கைநாட்டுகள் தான். பொதுவாகவே எழுத்தாளர் பட்டியலில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நாகர்கோவில் இந்து கல்லூரியில் 1972 இல் இளநிலை பட்டம் பெற்றேன். முதுநிலை பட்டப்படிப்புக்காக திருச்சி பிரபல முஸ்லிம் கல்லூரியில் விண்ணப்பித்தேன். நீ ‘இந்து முஸ்லிம்’ உருது முஸ்லிம்களுக்குத்தான் சீட் தருவோம். திருப்பியனுப்பினார். நிர்வாகத்திலிருந்த ஹாஜியார் எம்.பி.பி.எஸ் தேர்வு எழுதி தேறினேன். மூன்றெழுத்துக் கட்சியில் முக்கியப் பொறுப்பாளி முஸ்லிம் தமிழக மந்திரியாக இருந்தார். அவரது உதவியாளரான நான்கெழுத்து பெயருக்குரிய முஸ்லிமைச் சந்தித்து சிபாரிசு வேண்டினேன். 20,000 ரூபாயோடு வா சீட் தருகிறோம் என்றார். சென்னை மூலக்கொத்தளத்தில் கருவாடு வியாபாரம் செய்யும் எனது உறவினர் தான் கடனாக அப்பணத்தை தருவதாகக் கூறினார். வீட்டில் அனுமதி கேட்டேன். நம் சொத்து முழுவதும் விற்றாலும் கடனைத் தீர்க்கவியலாது, ஊருக்குப் புறப்பட்டு வா என்றனர். பிறகு வேறு கல்லூரிக்கு எம்.ஏ. சேர்ந்தேன். அங்கிருந்த துணை முதல்வர் எஸ்.சுப்ரமண்யனார் உதவினார். எனக்குத் தமிழ் போதித்தவர் சி.இலக்குவனார்.

என் வாழ்வில் உதவியவர்கள் அனைவரும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், ஓய்வு பெற்ற பிறகு ஆய்வு மாணவர்களுக்கு கெய்டாக இருக்கிறேன். திருவனந்தபுரம் யூனிவர்சிட்டியில் 23 ஆய்வியல் துறைகள் உள்ளன. நான்காவது தேசிய கருத்தரங்கு “தமிழிலக்கியத்தில் புதிய போக்கு” தலைப்பில் கேரள அரசு கல்வித்துறை உதவியுடன் 2007-இல் இரண்டு நாள் நடைபெற்றது. பேராசிரியர் பாரூக், சேமுமு, சாயுபு மரைக்காயர், நத்தர்சாவை அழைத்திருந்தேன். கலந்து கொண்டு கட்டுரை வாசித்தனர்.

அகாடமியன்ஸ் அல்லாதவர்களை அழைத்து கல்லூரியில் பேச வைக்க இயலாமைக்குக் காரணம். அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. எம்ஃபில், பி.ஹெச்.டி முடித்தவர்களையே அழைத்து பேச வைக்க முடியும். முஸ்லிம் முரசில் மூன்று பக்கமாவது கட்டுரைகள் இடம் பெற வேண்டும். சமூக ஆய்வு செய்து எழுதணும். பெண்கள் பிரச்சினை, திருக்குர்ஆன், ஹதீஸ் பதிவு செய்யப்படணும். மற்ற, மாத இதழ்கள் போல் கொண்டு வராதிருக்க கட்டுப்பாடு விதித்துக் கொள்வது அவசியம்.

 

 

நன்றி :

முஸ்லிம் முரசு

ஜுன் 2011

Tags: ,

Leave a Reply