பெரும்புலவர் சி நயினார் முஹம்மது

IATR Jaffna03கடந்த  23.7.2014
85 வயதில் அமெரிக்காவில்
பேராசிரியர் நயினா முகமது காலமானார்
என்ற செய்தி அறிந்ததும்
நெஞ்சம் கலங்கியது.
எனக்கு அன்பர்.
தமிழாராய்ச்சியில் வழிகாட்டி.
திருச்சிக் கல்லூரியில்
ஈழத் தமிழ் மாணவரை ஆதரித்த
முதல்வர்ப் பெருந்தகை.
1974ஆம் ஆண்டு சனவரி 10ஆம் நாள்
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப முன்றலில்
பேராசிரியர் நயினா முகமது உரையாற்றுகையில்
அரசின் காவலர் படைத் தாக்குதல் நடந்தது.
9 உயிர்கள் பலியாயின.
1974இல் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த படம் பார்க்க.
கலகவெறிக் காவலர் படையை வழிநடத்திய
காவல்துறைத் தலைவரின் படமும் காண்க.


மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

tamilnool@gmail.com
அரிய படப் பகிர்வு. பேராசிரியர் நினைவைப் போற்றுவோம்.

பேராசிரியருடன் இருக்கும் ஆர்வமான இளைஞர் பட்டாளத்தில் உயிர் பிழைத்திருப்போருக்கு அறுபது வயதுக்கு மேல் ஆகியிருக்கும். ஆரவாரத்துடன் படத்தில் இருப்போரில் சிலர் ஒன்பதில் ஒருவராகவும் இருக்கக்கூடும் என்ற எண்ணம் மனதைக் கனக்க வைக்கிறது.
காவலர் தலைவனைப் பார்க்கையில் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’ குறள் நினைவுக்கு வருகிறது.
அன்புடன்

சொ.வினைதீர்த்தான்
karuannam@gmail.com
IATR Jaffna 14

Leave a Reply