பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி சார்பில் அய்.ஏ.எஸ். தேர்வு இலவச வழிகாட்டு கருத்தரங்கு

சென்னை, டிச. 25-

பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி சார்பில் இல வச வழிகாட்டு கருத் தரங்கு டிச. 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மு.ராஜேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:

கடந்த 27 வருடங்களாக அய்.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி அளித்து வரும் பெரியார் அய்.ஏ.எஸ். அகடாமியின் சார்பில் சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் அய்.ஏ.எஸ். தேர்வு பற்றிய இலவச வழிகாட்டு கருத்தரங்கு வரும் டிசம்பர் 27-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை பெறவுள்ளது.

கருத்தரங்கில் அய்.ஏ.எஸ். பயிற்சி அனுப வமிக்க வல்லுனர்களும், அண்மைக் காலங்களில் தேர்வு பெற்ற அதிகாரிகளும் கலந்து கொண்டு தேர்வு எழுத விழை வோருக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

தேர்வு அணுகுமுறை, தயார் செய்தல், விருப்பப்பாடங்கள் தெரிவு உள்பட தேர்வின் அனைத்து நிலைகளுக்கும் ஆலோ சனை வழங்கப்படுகிறது. அனுமதி இலவசம் மற் றும் முன்பதிவு அவசியம்.

அய்.ஏ.எஸ். – 2015 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் தனியாகத்தொடங்கப் படவுள்ளன. பயிற்சி 32 வாரங்கள் நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு (044) 2661 8056 / 99406 38537.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: , , , , ,

Leave a Reply