பெண்ணிவள்

காற்றாய் மென்மையும் கனியாய் இனிமையும் கொண்டு

……கனவிலும் நினைவிலுமே

ஊற்றாய்ப் பெருகிடும் மேனி உணர்வுகள் எல்லாம்

..ஒடுங்கிடத் துணையாக

ஆற்றல் மிக்கவன் படைத்து வழங்கினான் நாமும்

….ஆறுதல் பெற்றிடத்தான்

போற்றும் வாழ்வினில் இன்பம் எய்திட இவளைப்

….புரிந்தவர் வென்றனரே!

— -அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

Tags: 

Leave a Reply