புரட்சியின் பூபாளம்

வரதட்சணை பாரத்தால்
வாடிடும் பெண்களுக்கும்,
மாமியார் கொடுமையால்
மாண்டிடும் பெண்களுக்கும்,

பாலியல் பலாத்காரத்தால்
பரிதவிக்கும் பெண்களுக்கும்,
அடுக்களை வேலைகளில்
அல்லல்படும் பெண்களுக்கும்,

கள்ளிப்பால் குடித்துக்
கருகிப்போன சிசுக்களுக்கும்,
நெல்மணிகளின் நெருக்கத்தால்
நீர்த்துப்போன பெண்களுக்கும்,

புலரவேண்டும் புரட்சியின் பூபாளம்!

மல்லிகைபோன்ற பெண்கள்நல்
மதிப்புப்பெற்றிட வேண்டும்!
மங்கையரைக் கண்டவுடன்
மரியாதையேற்பட வேண்டும்!

பாதுகாப்புடன் பெண்கள்
பலதுறைகளிலும் பெண்கள்,
பாரதிகண்ட பெண்களாகப்
புதுமைகள் தோற்றுவிக்கப்
புலரட்டும் பூபாளம்!

காரைக்குடி. பாத்திமா ஹமீத்
ஷார்ஜா

Tags: 

Leave a Reply