புத்துணர்ச்சியை தரும் இளநீர்

புத்துணர்ச்சியை தரும் இளநீர்

வெயில் காலங்களில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்ய கூடியதும், சிறுநீர் எரிச்சலை தணிக்கும் தன்மைகொண்டதுமான இளநீர் மற்றும் குருதிபோக்கை கட்டுப்படுத்தும் தென்னையின் குருத்தோலை, உடல் எடையைஅதிகரிக்கும் தன்மை கொண்ட கொப்பரை தேங்காய் ஆகியவற்றின் நன்மைகளை பார்ப்போம்.

தென்னை என்பது இல்லத்திலும், தோட்டத்திலும் இருக்கக்கூடிய மரம். தென்னை பல்வேறு நன்மைகளைகொண்டது. இதனுடைய ஓலைகள், குருத்துகள், காய்கள், நார்கள், வேர் என அனைத்தும் மருந்தாகிறது.தென்னையில் துவர்ப்பு சத்து அதிகம் உள்ளது. தென்னை மரத்தின் பாலை, குருத்து, பூ ஆகியவை துவர்ப்புசுவையை கொண்டவை.

பல்வேறு சத்துக்களை கொண்ட இளநீரை பயன்படுத்தி வெயில் காலங்களில் ஏற்படும் நீர் இழப்பை சமன் செய்யகூடிய மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: இளநீர், பனங்கற்கண்டு. இளநீருடன் ஒரு ஸ்பூன்அளவுக்கு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பருகுவதன் மூலம் நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.சிறுநீர் எரிச்சல் தணிகிறது. வெயில் காலத்தில் தலை சூடாவதால் மயக்க நிலை ஏற்படும். இந்த மயக்கத்தைபோக்க கூடிய அற்புதமான பானம் இளநீர். வழுக்கை உடையதாக இருக்கும் இளநீரை தான் குடிக்க வேண்டும்.

தென்னையின் குருத்தோலையை பயன்படுத்தி ரத்த மூலம், அதனால் ஏற்படும் குருதிப்போக்கை கட்டுப்படுத்தும்தேனீர் தயாரிக்கலாம். குருத்தோலையை இடித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நீர்விட்டு கொதிக்க வைக்கவேண்டும். பின்னர், வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். இது ரத்த மூலத்தை குணப்படுத்த கூடியதாகஇருக்கிறது. ரத்த கசிவை சரி செய்யும். மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் அதிக ரத்தபோக்கை தடுக்க கூடியது.

கொப்பரை தேங்காயை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். இதற்கு தேவையானபொருட்கள்: பச்சரிசி, பாதாம் பருப்பு, கொப்பரை தேங்காய், பனங்கற்கண்டு. பாதாம், பச்சரிசியை இரவில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் கொப்பரை தேங்காயை சேர்த்து அரைத்து நீர்விட்டு கொதிக்க வைக்கவேண்டும். வாசனைக்காக ஏலக்காய் தட்டி போடவும். சுவைக்காக இதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர்,காய்ச்சிய பால் சேர்த்து பருகலாம். இது பாயசம் போன்ற சுவையை தரும்.

இதை சாப்பிடுவதால் வயிற்று புண் ஆறும். வயிற்று வலியை போக்கும். உடல் எடை மிகவும் குறைவாகஇருப்பவர்கள், கன்னத்தில் குழி விழுந்து காணப்படுபவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் எடைஅதிகரிக்கும். முகம் பொலிவு பெறும். பல்வேறு நன்மைகளை கொண்ட தென்னை மரத்தின் வேர், ஓடுபோன்றவற்றை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன

 

Tags: ,

Leave a Reply