புதுக்கோட்டை அரசு மருத்துவர் வடிவமைத்த பெரிஸ் மவுத் கேக் ஹோல்டர் கருவி

ராம்மோகன், புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் காது, மூக்கு, தொண்டை அறுவைசிகிச்சைக்கு உதவும் வகையில் பெரிஸ் மவுத் கேக் ஹோல்டர் எனும் கருவியை வடிவமைத்துள்ளார்.

பதுக்கோட்டை மாவட்ட அரசுதலைமை மருத்துவமனையில் மூத்த குடிமை மருத்துவராக  பணியாற்றி வருபவர் மு.பெரியசாமி. அறுவைச்சிகிச்சையின்போது உதவும் வகையில் எளிமையான பல கருவிகளை ஏற்கனவே இவர் வடிவமைத்து இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அரசின் விருதுகளைப் பெற்றவர்.
இந்நிலையில். காது, மூக்கு, தொண்டை ஆகிய பாகங்களில் அறுவைச் சிகிச்சை செய்யும் பயன்படும் வகையில் பெரிஸ் மவுத் கேக் ஹோல்டர் என்ற எளிமையான  கருவியை வடிவமைத்துள்ளார்.
இது குறித்து மருத்துவர் மு, பெரியசாமி கூறியது: ஏற்கனவே உள்ள கருவியானது மூன்று பாகங்களை தனிதனியாக கொண்டது ஆகவே nதைசெயல்படுத்துவதில் மிகசிரமமும் பயிற்ச்சியும் தேவைப்பட்டது. ஆனால் இந்தபுதுக்கருவியானது ஒரே கருவியாகவும் பயன்படுத்துவதற்க்கு எளிமையாகவும் அறுவைசிகிச்சைக்கு தேவையான அனுகுமுறைகளை எளிதில் வடிவமைக்கும் வண்ணம் உள்ளது அதனால் அறுவைசிகிச்சை எளிதில் நல்லபடியாக செய்துமுடிக்க உதவுகிறது. விலைகுறைவாகவும் பயன்படுத்துவதற்க்கு எளிமையாகவும் பராமரிப்புக்கு ஏற்றதாகவும் எடுத்து செல்ல வசதியாகவும் அறுவைசிகிச்சைக்கு இடையுறு இல்லாமல் தொழிலாளர்கள்  எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இக்கருவியைப் பயன்படுத்தி புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை ஒரு நோயாளிக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து  காது, மூக்கு, தொண்டை பிரிவு  மருத்துவ நிபுணர் எஸ்.ராமபாண்டியன் கூறியது:   ஏற்கனவே  உள்ள கருவியில் உள்ள சிரமங்களை களைவதுடன்  பயன்படுத்துவதற்க்கு எளிமையாகவுள்ளதாகவும் தெரிவித்தார்..
மேலும் இந்த கருவி செயல்பாட்டை மருத்துவமனை கணகாணிப்பாளர் .சையதுமுகைதீன், இருக்கைமருத்துவா; க.கிருஷ்ணராஜ்,  காது,மூக்கு,தொண்டை   உதவி மருத்துவ நிபுணர் ஏ.இந்திராணி ஆகியோர் மேற்பார்வையிட்டு பாராட்டுத்தெரிவித்தனர்.

Tags: , , ,

Leave a Reply