புகைவண்டி

—  ராஜேஸ்வரி ஸ்ரீதர்  —
கூக்கூக் புகைவண்டி
கூவிச்செல்லும் புகைவண்டி
நூறு மீட்டர் புகைவண்டி
நாங்கள் செல்லும் புகைவண்டி
பச்சை வண்ணம் பார்த்தாலே
பாய்ந்து செல்லும் புகைவண்டி
சிவப்பு வண்ணம் பார்த்தாலே
சிரித்து நிற்கும் புகைவண்டி
மரம் 
நெட்டை குட்டை மரம் இது
நிமிர்ந்து எங்கும் நிற்குது
நிழலை வாரி வீசுது
நிம்மதி நமக்கு கொடுக்குது
சாலை ஒர மரம் இது
சக்தி கொடுக்கும் மரம் இது
வீடு கட்டும் மரம் இது
விரும்பி ஏற்கும் மரம் இது
பூத்துக் குலுங்கும் மரம் இது
பூலோகம் விரும்பும் மரம் இது
காய்த்துத் தொங்கும் மரம் இது
கனி கொடுக்கும் மரம் இது
(  ராஜேஸ்வரி ஸ்ரீதர் என்ற பெயருடைய பெண்மணி சென்னை மேடவாக்கத்திலுள்ள ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி வித்யா மந்திர் பள்ளியின் ஆசிரியை.
மணமாகும்வரை அவர் நடுநிலைப்பள்ளி கூட தாண்டவில்லை. நல்லதொரு வாழ்க்கைத் துணையால் அண்ணாமலை பல்கலையில் தொலைதூர கல்வி படிக்கத்  தொடங்கியவர் இன்று தமிழில் முனைவர் பட்டம் முடிக்கும் தருவாயில் இருக்கிறார் (திராவிட பல்கலை, குப்பம்). கூடுதலாக நூலகப் படிப்பில் MLIS படித்துக்கொண்டு இருக்கிறார்.
மாற்றுத் திறனாளியான அவர் (பல்வேறு சிக்கல்கள்) நிறையப் படித்திருந்தாலும்  2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும்படி பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இவர் பாடம் எடுக்கும் விதம் குறித்து கேட்டபோது
தமிழ்ப் பாட்டுகளின் மூலமாக கணக்கும் சொல்லிக்கொடுப்பதால்,
மற்ற வகுப்பு குழந்தைகள் (அவர்களின் பெற்றோர்களும்) இவர் தங்கள் வகுப்பிற்கும் பாடம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
எழாம் வகுப்பு படிக்கும் அண்ணனின் தவறுகளை (தமிழ்ப் பாடத்தில்) 3 ஆம் வகுப்பு படிக்கும் தங்கை சுட்டிக்காட்டி கேலி செய்வதாக பெற்றோர் கூறுவதுண்டாம். )
தகவல் :
பாரதி
dgbharathi@gmail.com
Tags: ,

Leave a Reply