பி.இ. மாணவர்கள் இனி 7 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க வேண்டும்

பி.இ. மாணவர்கள் இனி 7 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க வேண்டும்

பொறியியல் ( பி.இ.) மாணவர்கள் இனி அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிப் பெற வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விதிகளின்படி, பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள், 4 ஆண்டுகள் படிப்பை முடித்த பிறகு, ஏதேனும் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் (அரியர்), அதற்கடுத்த 3 ஆண்டுகளில் அந்த பாடங்களுக்கான தேர்வை எழுதிஅதில் தேர்ச்சி பெற வேண்டும். இருந்த போதும், உரிய காரணங்களை தெரிவிக்கும் மாணவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகும் அரியர் தாள்களை எழுத, இதுவரை அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிறப்பு அனுமதியை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ரத்து செய்துள்ளது.
விருப்பப்பாட தேர்வு முறை (சி.பி.சி.எஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைவது இனி குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் தரமான மாணவர்களைக் உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு அதிகபட்சம் 7 ஆண்டுகளில் பொறியியல் படிப்பை முடிக்க வேண்டும் என்ற நடைமுறையை இனி தீவிரமாக நடைமுறைப்படுத்த முடிவு எடுத்துள்ளோம் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி, வரும் 2017 -நவம்பர், டிசம்பர் பருவத்தேர்வை, 2011 -ஆம் ஆண்டுக்கு முன்பாக பி.இ. படிப்பில் சேர்ந்த மாணவர்கள் எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Tags: ,

Leave a Reply