பிப்ர‌வ‌ரி 26, முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌ ஆண்டு விழா

முதுகுள‌த்தூர் : முதுகுள‌த்தூர் இஸ்லாமிய‌ ப‌யிற்சி மைய‌த்தின் ஆண்டு விழா ம‌ற்றும் ப‌ரிச‌ளிப்பு விழா 26.02.2012 ஞாயிற்றுக்கிழ‌மை பிற்ப‌க‌ல் 2 ம‌ணிக்கு சி.எஸ்.சி. கம்ப்யூட்ட‌ர் ப‌யிற்சி மைய‌ வ‌ளாக‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து என‌ ப‌யிற்சி மைய‌ முத‌ல்வ‌ர் ஹெச்.ஏ. முஹ‌ம்ம‌து சுல்தான் அலாவுதீன் தெரிவித்துள்ளார். அத‌ன் விப‌ர‌மாவ‌து :
பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் எம். சீனி முஹ‌ம்ம‌து த‌லைமை வ‌கிக்கிறார். த‌லைமை இமாம் மௌல‌வி எஸ். அஹம‌து ப‌ஷீர் சேட் ஆலிம், திட‌ல் ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் முதுவைக் க‌விஞ‌ர் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ ஆகியோர் முன்னிலை வ‌கிக்கின்ற‌ன‌ர்.
பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் துணை இமாம் மௌல‌வி எஸ்.டி. ஷேக் மைதீன்
ஆலிம் ம‌ன்ப‌ஈ இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதுகிறார்.
ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளி உத‌வித் த‌லைமையாசிரிய‌ரும், ப‌யிற்சி மைய‌ முத‌ல்வ‌ருமான‌ ஹெச்.ஏ. முஹ‌ம்ம‌து சுல்தான் அலாவுதீன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார்.
ப‌த்தாம் ம‌ற்றும் ப‌னிரெண்டாம் வ‌குப்பு பொதுத்தேர்வில் அதிக‌ ம‌திப்பெண் பெற்ற‌வ‌ர்க‌ள், தீனியாத் வ‌குப்பில் சிற‌ப்பிட‌ம் பெற்ற‌வ‌ர்க‌ள், குர்ஆன் ஓதும் போட்டியில் சிற‌ப்பிட‌ம் பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கி ப‌ள்ளிக்க‌ல்வித்துறை முன்னாள் இணை இய‌க்குந‌ர் எம்.எஸ். நெய்னா முஹ‌ம்ம‌து, தேசிய‌ ந‌ல்லாசிரிய‌ர் எஸ். அப்துல் காத‌ர், இராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் ஆலோச‌க‌ர்  எம்.எஸ். சௌக்க‌த் அலி, க‌ல்விக்குழுத் த‌லைவ‌ர் ஏ. இக்பால், தாளாள‌ர்க‌ள் எம்.எம்.கே.எம். காத‌ர் முகைதீன், எம்.சாகுல் ஹ‌மீது, ந‌ல்லாசிரிய‌ர் எஸ். காத‌ர் முகைதீன், பேரூராட்சி துணைத்த‌லைவ‌ர் ஏ. பாசில் அமீன், தொட‌க்க‌ப்ப‌ள்ளி த‌லைமையாசிரிய‌ர் என். காத‌ர்ஷா, ஹிம்ம‌த்துல் இஸ்லாம் வாலிப‌ர் ச‌ங்க‌ த‌லைவ‌ர் எஸ். முஹ‌ம்ம‌து இக்பால், ஷ‌ரிஅத்துல் இஸ்லாம் ச‌ன்மார்க்க‌ ச‌ங்க‌ த‌லைவ‌ர் ஏ. முஹ‌ம்ம‌து காசிம், ஐக்கிய‌ அர‌பு அமீரக ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் செய‌ற்குழு உறுப்பின‌ர்  பி.அகம‌து அன‌ஸ் ஆகியோர் வாழ்த்துரை வ‌ழ‌ங்குகின்ற‌ன‌ர்.
ஜ‌மாஅத் உத‌வித்த‌லைவ‌ர் ஏ.காத‌ர் மைதீன் ந‌ன்றியுரை நிக‌ழ்த்துகிறார். மௌல‌வி ஏ. முஹ‌ம்ம‌து மூசா ஆலிம் ர‌ஹ்மானி துஆ ஓதுகிறார்.
இப்ப‌யிற்சி மைய‌ம் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் ஆத‌ர‌வில் ந‌டைபெற்று வ‌ருகிறது.
Tags: ,

Leave a Reply