பாரதச் சோலையில் பாசிச மிருகங்கள்

 

மதிநாகூரான்

 

பாரதச் சோலையில்

பாசிச மிருகங்கள் !

பண்பாடு அழிக்கும்

பராக்கிரமச் செயல்கள் !

 

மதவாதம் பிடித்த

காட்டுமிராண்டித்தன

காண்டா மிருகங்கள்

காட்டும் செயல்களில்

காடாக மாறிட

கலங்கும் நகரங்கள் !

 

நயவஞ்சகத்தால்

நாட்டார்களையெலாம்

நடுங்கிடச் செய்யும்

நரிகள் கூட்டம் !

 

ஒடுக்கப் பட்ட

ஆட்டுக் குழுவினை

ஆட்டிப் படைத்து

அந்நியப் படுத்தி

மோதிடச் செய்து

குருதி குடிக்கும்

கொடும் ஓநாய்கள் !

சிறுபான்மை இன

முசல் மான்களை

கடித்துக் குதறி

துரத்தி விரட்டும்

அ சிங்கங்கள் !

 

விளிம்பு நிலை

குதிரைக் குழாமை

குப்புற வீழ்த்தும்

கரடிக் கூட்டம் !

 

வெறி பிடித்த

வேட்டைப் புலிகள்

வீசும் குண்டுகளில்

வெந்து நீறாகும்

வகுப்பு ஒற்றுமை !

 

முன்னோக்க முதலைகள்

முந்தி விரட்டிட

மூச்சிரைக்க ஓடும்

பின்னோக்க மூமின்கள் !

 

நன்றி

 

சமரசம்

1-15 டிசம்பர் 2008

Tags: , ,

Leave a Reply