பாபர் மஸ்ஜித் தகர்ப்பு: லிபரான் கமிஷன் – ஒரு பார்வை – காயல் மகபூப்

பாபர் மஸ்ஜித்
இந்திய சரித்திரத்தை அலங்கரிக்கும் முகலாய சாம்ராஜ் யம் 1526-ல் இந்தியாவில் உதயமானது. பாபரின் படைப்பிரிவில் தளபதியாக இருந்த மீர் பக்கி என்பவரால் 1528-ல் அயோத்தியில் கட்டப்பட்ட மஸ்ஜித் தான் பாபர் மஸ்ஜித் என அழைக்கப்பட்டது.

1855-ல் வெள்ளையர்களின் சூழ்ச்சியால் இந்துத்துவ இயக்கங்கள் தூண்டி விடப்பட்டு பாபர் மஸ்ஜிதுக்கு முன் புறம் ராம் சாபுத்ரா|| ஒன்று இருந்ததாக பிரச்சினை கிளப்பப்பட்டது.

இந்த இடத்தில் கோயில் கட்ட அனுமதி கேட்டு ரகுபீர் தாஸ் என்பவர் பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பள்ளிவாசலுக்கு முன் கோயில் அமையக் கூடாது என அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

1940-ல் பாபர் மஸ்ஜித் சன்னி முஸ்லிம்களுக்கா? அல்லது ஷியா முஸ்லிம்களுக்கா? என சர்ச்சை எழுந்து நீதிமன்றம் சென்றது. அம்மஸ்ஜித் சன்னி முஸ்லிம் களுக்கே சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1947 ஆகஸ்டில் நாடு பிரிவினை செய்யப்பட்டு இந்தியா-பாகிஸ்தான் என பிரிக்கப்பட்டபோது நாடு முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி 1949 டிசம்பர் 23ல் ராமர் சிலை பள்ளிவாசலுக்குள் பலாத்கரமாக வைக்கப்பட்டது. 1959-ல் பள்ளி வாசல் இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. பாபர் மஸ்ஜிதுக் கான முழு ஆதாரங்களையும், அதைச் சுற்றி உள்ள அடக்கத்தலத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென வக்ஃபு வாரியம் வழக்கு தாக்கல் செய்தது.

1989 நவம்பர் 9 அன்று பாபர் மஸ்ஜித் வளாகத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1990 அக்டோபர் 30-ல் பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என சங்பரிவார் அமைப்புக்கள் அறிவித்து அத்வானி ரத யாத்திரை நடத்தினார்.

1991 ஜூன் 24-ல் உத்தரப்பிரதேசத்தில் கல்யாண்சிங் தலைமையில் பாரதீய ஜனதா அரசு அமைந்தது. அந்த அரசு பாபர் மஸ்ஜிதை சுற்றியுள்ள 2.774 ஏக்கர் நிலத்தை தன்வசம் கையகப்படுத்தியது.

1992 மார்ச்சில் பாபர் மஸ்ஜித் சுற்றியுள்ள 42 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு இராம ஜன்ம ப+மி அறக்கட்டளைக்கு அளித்தது.

1992 டிசம்பர் 6-ல் கரசேவையை துவக்கப்போவதாக விஷ்வ ஹிந்த் பரிஷத் அறிவித்தது.

முஸ்லிம்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தை நாடப்பட்டது. கரசேவையின் போது மஸ்ஜிதுக்கு எந்த சேதமும் ஏற்படாது என உ.பி. அரசு உச்ச நீதி மன்றத்தில் உறுதிமொழி தந்தது. உச்ச நீதிமன்றம் அதை நம்பியது.

1992 டிசம்பர் 5 அன்று பாபர் மஸ்ஜித் தகர்ப்பிற்கு ஒத்திகை பார்க்கப்பட்டது.

1992 டிசம்பர் 6 காலை 8 மணிக்கு எல்லையாக நடப்பட்டிருந்த இரும்புக் குழாய்கள் அகற்றப்பட்டன. 11மணிக்கு தடுப்பு வளையம் தகர்க்கப்பட்டது. பகல் 12மணிக்கு மஸ்ஜிதை உடைக்கத் தொடங்கி மாலை 6 மணிக்கு உடைத்து முடிக்கப்பட்டது. 6.30 மணிக்கு ராமர் சிலை வைக்கப்பட்டது.

இந்த அக்கிரமங்கள் அனைத்தும் அட்டல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், உமாபாரதி, வினைக்கட்டியார் உள்ளிட்ட சங்பரிவார் தலைவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான துணை ராணுவப் படை, உத்தரபிரதேசத்தின் ஆயுத போலீசார் முன்னிலையில் இந்த தேசிய அவமானம் அரங்கேற்றப்பட்டது.

பாபர் மஸ்ஜிதை தகர்த்து முடித்த கரசேவகர்கள் ராணுவ பாதுகாப்போடு அரசாங்க விருந்தாளிகளாக அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

லிபரான் கமிஷன்
பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்டது சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். லிபரான் அவர்களை ஒரு நபர் கமிஷனாக 16.12.1992 அன்று மத்திய அரசு நியமித்தது.

இந்த கமிஷன் விசாரிக்க வேண்டிய அம்சங்கள் என மத்திய அரசு நிர்ணயித்தவை 1. 6.12.92 அன்று பாபர் மஸ்ஜித் தகர்ப்புக்கு காரணமான சூழ்நிலைகள், உண்மைகள்.

2. பாபர்மஸ்ஜித் தகர்ப்பில் தனி நபர்கள், அமைப்புகள், உத்தரபிரதேச அரசு அதிகாரிகள், மாநில அமைச்சர்கள், மாநில முதலமைச்சர் ஆகியோரின் பங்கு.

3. உத்தரபிரதேச அரசு வழங்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகள், பாபரி மஸ்ஜித் தகர்ப்புக்கு எவ்வாறு உதவின? என்பது பற்றிய விவரம்.

4. 6.12.92 அன்று ஊடக நிருபர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து.

5. அந்த நீதி விசாரணைக்கு வரையரைக்குட்பட்ட வேறுஏதும் இருப்பின் அதுகுறித்து.

இந்த லிபரான் கமிஷன் விசாரணை இந்தியாவிலேயே நடத்தப்பட்ட நீதி விசாரணைகளில் மிக நீண்ட காலம் நடத்தப்பட்ட விசாரணையாகும்.

17ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைக்கு 8கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவிட்டுள்ளது.

இந்த விசாரணையில் பல்வேறு அரசியல்வாதிகள், அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண்சிங், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோருடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூன்று மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக் கையை சமர்ப்பிக்கும்படி கமிஷனுக்கு கால நிர்ணம் செய்யப்பட்டது. ஆனால் 17 வருடங்களாக 48முறை கால நீடிப்பு செய்யப்பட்டு 30.6.09 அன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

லிபரான் கமிஷன்-கசிந்த உண்மைகள்
மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு ரகசியமாக பாதுகாக்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கை டெல்லி யில் இருந்து வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ்|| ஆங்கில நாளிதழில் நேற்று காலை வெளியானது.

பலத்த பாதுகாப்புடன் மத்திய உள்துறை வைத்திருந்த இந்த அறிக்கை எப்படி பத்திரிகைக்கு வந்தது என்ற அதிர்ச்சியும் ஆச்சரியமும் நாடெங்கும் எதிரொலித்துள் ளது. லிபரான் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஏனெனில் லிபரான் கமிஷன் அறிக்கையில் முன் னாள் பிரதமர் வாஜ்பாய், பாராளுமன்ற பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, பா.ஜ.க. முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் போலி மிதவாதிகள்|| என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லிபரான் கமிஷன் அறிக் கையில் உள்ள மற்ற தகவல்கள் வருமாறு:

1992-ம் ஆண்டு பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் காரணம். இதற்கான ஆதாரங்கள் நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் அலுவலக ஆவணங்கள் உள்ளன.

திட்டமிட்ட செயல்
பாபர் மஸ்ஜிதை எப்படி இடிக்க வேண்டும்? அந்த சமயத்தில் யார்-யார் என்னென்ன செய்ய வேண்டும் என்பது மிக, மிக திட்டமிட்டு நடத்தப்பட்டது. சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து பாபர் மஸ்ஜிதை இடித்து விட்டனர். இதன் மூலம் இந்தியா முழுவதும் மதக் கலவரம் ஏற்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார். அங்குதான் ராமருக்கு கோவில் கட்ட வேண் டும் என்று சிலரால் நடத்தப்பட்ட பிரச்சாரத்தை பெரும்பாலான மக்கள் குறிப்பாக இந்துக்கள் விரும்ப வில்லை. ஆதரவும் கொடுக்கவில்லை. உண்மையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோஷம் பெரும் இயக்கமாக இருக்க வில்லை.

இந்து மதத் தலைவர்களையும், சாமியார்களையும் அமைதிப்படுத்தவே ஹஹஅயோத்தி ராமர் கோவில்|| என்ற கோஷம் எழுந்தது. இதற்காக அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் ரத யாத்திரைகளை நடத்தினார்கள். அதன் மூலம் பொதுமக்களிடம் உணர்வுகளைத் தூண்டி ராமர் கோவில் இயக்க பணிகளில் சேர வைத்தனர்.

அதன் பிறகு மிகவும் திட்ட மிட்டு பாபர் மஸ்ஜித் இடிக் கப்பட்டது. அயோத்தியில் கரசேவைக்காக திரண்டிருந்த தொண்டர்கள் திடீரென எதிர்பாராத விதமாக உணர்ச்சிவசப்பட்டு பொங்கி எழுந்து விட்டதால் பாபர் மஸ்ஜித் இடிப்பு சம்பவம் நடந்ததாக சங்பரிவார் சொல்கி றது. இதை ஏற்க இயலாது.

பாபர் மஸ்ஜித் இடிப்பு முன் கூட்டியே விரிவாக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகும். மிக, மிகக் கவன மாக இந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

நிரபராதிகள் அல்ல
பாபர் மஸ்ஜித் இடிப்புக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாஜ்பாயும், அத்வானியும் விசாரணையின்போது தெரிவித்தனர். அயோத்தியில் நடந்த சம்பவம் தன் மனதில் வலி ஏற்படுத்தியதாக இந்த விசாரணை கமிஷன் முன்பு ஆஜாரன போது அத்வானி கூறினார். இதற்காக அவர்களை குற்றமற்றவர்கள், நிரபராதிகள் என்று சொல்லி விட முடியாது. அயோத்தி ராமர் கோவில் பிரச்சாரத்தில் நாட்டு மக்களிடம் நன்கு அறிமுகமான தலைவர்களாக வாஜ்பாய், அத்வானி, ஜோஷி ஆகியோர் இருந்தனர். அவர்களை தங்கள் திட்டத்துக்கு சங்பரிவார் அமைப்புகள் பயன் படுத்தி உள்ளது. இப்போதும் கூட பா.ஜ.க.வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் எல்லா அதிகாரமும் சங்பரிவார் அமைப்புகளிடம்தான் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போடும் உத்தரவை மீறும் துணிவு இந்த தலைவர்கள் யாரிடமும் இருந்தது இல்லை. எனவே, பாபர் மஸ்ஜித் இடிப்புக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று வாஜ்பாய், அத்வானி, ஜோஷி கூற முடியாது. இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைகளில், ஆயுதங்கள் போல இருந்துள்ளனர்.

அந்த வகையில் பாபர் மஸ்ஜித் இடிப்புக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளது.

வரலாற்றுச் சான்று
நாஜி படை வீரர்கள் மீது போர்க் குற்றம் சுமத்தி விசாரணை நடந்தது. அப்போது நாஜி வீரர்கள், ஹஹஎங்கள் தலைமை உத்தரவுப்படி செயல்பட்டோம்|| என்றனர். இந்த வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனவே சந்தேகத்தின் அடிப்படையில் பா.ஜ.க. தலை வர்களுக்கு சலுகை வழங்க முடியாது. இந்த குற்றச் சாட்டில் இருந்து அவர்களை விடுவிக்க இயலாது. வாஜ் பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மூவரும் வாக்காளர்களின் நம்பிக்கையை மீறி செயல்பட்டுள்ளனர்.

கரசேவர்கள்
பாபர் மஸ்ஜிதை இடித்தது சங்பரிவார் ஏற்பாடு செய்த கரசேவகர்கள் என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்த கரசேவகர்களை திட்டமிட்டு வழி நடத்தி ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர். பாபர் மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பாபர் மஸ்ஜிதுக்குள் எப்படி செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்டது.

சர்சைக்குரிய பகுதியில் கிடந்த பொருட்களை கொண்டே பாபர் மஸ்ஜிதை இடித்துள்ளனர். கரசேவ கர்களில் குறிப்பிட்ட சிலர் எண்ணிக்கையில் மிகக் குறை வான நபர்களே மஸ்ஜித் இடிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முகம் மூடப்பட்டிருந்தது.

சிலையை அகற்றியது, பணப் பெட்டியை எடுத்து சென்றது மற்றும் கரசேவகர்கள் நடந்து கொண்ட விதம் அனைத்தும் பாபர் மஸ்ஜித் மிக, மிகத்திட்டமிட்டு இடிக் கப்பட்டது என்பதை காட்டுகிறது. ஆட்சி, அதிகாரம் மற்றும் பணத்துக்காகத்தான் அவர்கள் பாபர் மஸ்ஜிதை இடித்த னர். மற்றபடி இதில் புராண நம்பிக்கை மீதான பற்று என்று எதையும் சொல்லஇயலாது.

தேர்தல் நோக்கம்
அயோத்தி ராமர் கோவில் பாபர் மஸ்ஜித் விவகாரத் தில் பா.ஜ.க. தலைவர்கள் சுயலாப நோக்கத்துடன்தான் நடந்து கொண்டனர். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க. தலைவர்கள் அயோத்தி ராமர் கோவில் விசயத்தை கையில் எடுத்த னர். ஆன்மீகவாதிகள் கையில் உள்ள வாளை எடுத்து இவர்கள் பயன்படுத்தி கொண்டனர்.

பாபர் மஸ்ஜித் இடிப்பை முன் நின்று நடத்தியதே இவர்கள்தான். ராம ஜென்மப+மி திட்டத்துக்காக அதன் தலைவர்கள் மக்களிடம் பல கோடி ரூபாய் பணம் வசூலித்து வங்கிகளில் போட்டு வைத்திருந்தனர். பாபர் மஸ்ஜித் இடிப்பில் ஈடுபட்ட கரசேவகர்களுக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

உமாபாரதி
பாபர் மஸ்ஜிதை இடிக்க வேண்டும் என்று வினய் கத்யார் பல தடவை பேசி கரசேவகர்களிடம் ஆவே சத்தை தூண்டி விட்டார் அதுபோல கரசேவகர்களை உமா பாரதியும் உசுப்பி விட்டார். பாபர் மஸ்ஜிதை இடியுங்கள் என்று அவர் உற்சாகப்படுத்தியதற்கு ஆதாரம் உள்ளது. விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் அசோக் சிங்கால், சிரிராஜ் கிஷோர் ஆகியோரும் கரசேவர்களை பாபர் மஸ்ஜித் இடிப்புக்காக வழி நடத்தினார்கள். எனவே, பாபர் மஸ்ஜித் இடிப்பில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் சங்பரிவார் தலைவர்களுக்கு அதிக பங்கு உள்ளது.

நரசிம்மராவ்
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது உத்தரப்பிர தேசத்தில் கல்யாண்சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்தது. அவர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்த தகவலும் கொடுக்காமல் இருந்து விட்டார். மாநில கவர்னர் பரிந்துரை செய்யாமல் மத்திய அரசு எந்த விவகாரத்திலும் தலையிட இயலாது.

எனவே, பாபர் மஸ்ஜித் இடிப்புக்கும் அப்போது மத்திய அரசை வழி நடத்தி சென்ற மறைந்த பிரதமர் நரசிம்மரா வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உத்தரப்பிரதேச அரசு மத்திய அரசிடம் எதுவும் கேட்கவில்லை என்பதே உண்மை. முஸ்லிம் தலைவர்கள்

பாபர் மஸ்ஜித் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைகள் உள்ளூர் கோர்ட்டுகளில் நடந்து வந்தன. இந்த வழக்கை நடத்த பாபர் மஸ்ஜித் நடவ டிக்கை குழு மற்றும் அகில இந்திய பாபர் மஸ்ஜித் நடவடிக்கை குழு இருந்தன. இந்த முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் சுய நலத் துடன்தான் செயல்பட்டனர்.

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் இந்த முஸ்லிம் தலை வர்கள் உண்மையான அக்கறை காட்டவில்லை. கோர்ட்டுக்கு உள்ளேயும் பிரச்சினையை தீர்க்க முஸ்லிம் அமைப்பு தலைவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க தவறி விட்டனர். அவர்கள் மீதும் தவறு உள்ளது.

இவ்வாறு லிபரான் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் முஸ்லிம் லீகின் குரல்
பாபர் மஸ்ஜித் தகர்ப்பை தலைமையேற்று நடத்தியதாக கூறப்படும் எல்.கே.அத்வானி, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் செல்வி உமாபாரதி ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலே அமைச்சர்களாக பதவி வகிப்பதை எதிர்த்து அவர்களை பதவி நீக்கம் செய்யக் கோரி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் ஜி.எம். பனாத்வாலா சாகிப் அவர்கள் பாராளு மன்றத்திலே மிகக் கடுமையாக போராடினார். 7.12.99 மற்றும் 14.12.2000 ஆகிய தேதிகளில் பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்களில் ஜி.எம். பனாத்வாலா சாகிப் பங்கேற்று சமுதாயத்தின் மானம் காக்க சமரசமற்ற கருத்துப்போர் நிகழ்த்தினார்.

அதேபோல், பாபரி மஸ்ஜித் இருந்த அந்த நிலப் பகுதி ஹஹஉள்ளது உள்ளபடி||யான நிலையை பராமரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு மனுதாக்கல் செய்தபோது அதை எதிர்த்து பாராளுமன்றத்திலே குரல் எழுப்பினார். 2001ம் வருடம் அக்டோபர் மாதம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் நிலப்பகுதியிலே விசுவ ஹிந்த் பரிஷத் தலைவர்கள் அத்துமீறி நுழைந்து ப+ஜைகள் செய்ததை கடுமையாக ஆட்சேபித்து பாரதீய ஜனதா அரசின் இந்துத்துவ ஆதரவு நிலையை கண்டித்து 3.12.2001 மற்றும் 16.3.2002 ஆகிய தேதிகளில் பாராளுமன்றத்திலே வீர உரை நிகழ்த்தினார்.

உச்ச நீதி மன்ற தடையை நீக்க பாரதீய ஜனதா அரசு செய்த அனைத்து முயற்சிகளையும் அம்பலப்படுத்தி இந்திய முஸ்லிம்களின் ஒட்டுமொத்த குரலாக பாராளுமன்றத்திலே தொடர்ந்து போராடி வந்தார்.

பாபர் மஸ்ஜித் நூல் வெளியீடு
பனாத் வாலா சாகிப் அவர்களின் பாராளுமன்ற உரைகள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இப்போது முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வெ. ஜீவகிரிதரன் அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை மூலம் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

பாபர் மஸ்ஜித் தகர்ப்பு சம்பந்தமான நூல் வருகிற 26.11.09 வியாழன் மாலை 5 மணிக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமை நிலையத்தில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களால் வெளியிடப்படுகிறது.

Leave a Reply