பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு உயர் நிலைப்பள்ளி பசுமைப்படை மாணவ,மாணவிகள் சார்பில் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் வீரேஸ்வரன் தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச்  சென்றது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் டெங்கு பற்றிய விழிப்புணர்வை  கிராம மக்களிடத்தில் எடுத்துரைத்தனர். பேரணியில் ஊராட்சி தலைவர் புவனேஸ்வரன், பசுமைப் படை அலுவலர் எம்.தென்னரசு, தமிழாசிரியை தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் எம்.திருமுருகன், சுரேஷ்ராம், அலெக்ஸ் லாரன்ஸ், ஆசிரியை செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில்  ஆசிரியர் ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

Tags: , , , ,

Leave a Reply