பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் என்.சி.சி., ஜே.ஆர்.சி, என்.எஸ்.எஸ், மாணவ, மாணவிகள் சார்பில் வெள்ளிக்கிழமை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 இப்பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி தொடங்கி வைத்தார். காந்தி சிலையில் தொடங்கி அரசு மருத்துமனை வழியாக பேரணி சென்றது. பின்னர் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.

 பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.கணேசன் தலைமை வகித்தார். என்.சி.சி திட்ட அலுவலர் எஸ்.துரைப்பாண்டியன், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் வி.துரைப்பாண்டி, நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் என்.மங்களநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கே.சரவணன், கே.முத்துராமலிங்கம், ஆசிரியை எல்.லதா ஆகியோர் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் பேரணியை வழிநடத்தி சென்றார். பேரணி முடிவில் முதுகலை ஆசிரியர் சந்தனவேலு நன்றி தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply