பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தி வார விழா

முதுகுளத்தூரில் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் பள்ளி வாசல் மழலையர் தொடக்கப் பள்ளி சார்பில் ஹிந்தி இரு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முகமது இக்பால் முன்னிலை வகித்தார். முதல்வர் வாசுகி வரவேற்புரை ஆற்றினார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கையெழுத்துப் போட்டி, கதை எழுதும் போட்டி போன்றவை நடைபெற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். விழாவில் தேசிய சேவைப் படை தொண்டர் பரமேஸ்வரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் செய்திருந்தார். முடிவில் ஹிந்தி ஆசிரியை மேனகா நன்றி கூறினார்.

Tags: , , ,

Leave a Reply