பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பள்ளிவாசல் நர்சரி பள்ளி ஆண்டு விழா நடந்தது. பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காத்ரமைதீன் தலைமையில் நடந்தது. மேல்நிலைபள்ளி தாளாளர் அன்வர், துவக்கபள்ளி தாளாளர் ஹபீப் முகம்மது முன்னிலை வகித்தனர். நர்சரி பள்ளி தாளாளர் பாசில் அமீன் வரவேற்றார்.

விளையாட்டு, மாறுவேட போட்டியில்வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சூசைதாஸ், வட்ட வழங்கல் அதிகாரி சபீதாபேகம் பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் வாசுகி நன்றி கூறினார்

Tags: , ,

Leave a Reply