பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம்

பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாளாளர் இ.முகம்மது உமர் தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர்கள் ஏ.கே.முகம்மது யாக்கூப், சை.கலீல்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் இடம் பிடிப்பதுடன், 100 சதவீதம் தேர்ச்சிக்காக சிறப்பு வகுப்புகள் நடத்துவது போன்ற கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டன.

Tags: , , ,

Leave a Reply