பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்குச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மழலையர் பள்ளிகளில் முதல் பருவம் செல்லும் குழந்தைகள், பள்ளி கேட் வரை துள்ளிக் குதித்து சென்றவர்கள், வகுப்பறைக்குச் சென்றவுடன் பெற்றோரை பிடித்துக் கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர்.

குழந்தைகளை சமாதானம் செய்ய இனிப்புகள் வழங்கப்பட்டன. இருந்தபோதிலும் குழந்தைகள் அழுதபடியே இருந்தனர்.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் விடை பெற்ற பிறகும் வெப்பத்தின் தாக்கம் சற்றும் குறையாததால், பகல் நேரத்தில் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். கடும் அனல் காற்று வீசியது ஆசிரியர்களையும் முதல் நாளிலேயே சோர்வடைய செய்ததது.

Tags: , , ,

Leave a Reply