பயிற்சியாளருக்கு பாராட்டு விழா

தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்த தமிழக லங்காடி அணி பயிற்சியாளருக்கு பாராட்டு விழா நடந்தது.
அரியானாவில், தேசிய அளவில் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான லங்காடி போட்டி நடந்தது. பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில், தமிழக லங்காடி அணி இரண்டாம் இடம் பிடித்தது. அணியின் பயிற்சியாளரும், தமிழ்நாடு லங்காடி கழகத்தின் தேர்வுக்குழு தலைவருமான ஜான்சன் கலைச்செல்வனை, மாவட்ட லங்காடி கழக சேர்மன் குமரன் சேதுபதி, தலைவர் ரமேஷ்பாபு, துணை தலைவர் பிரபாகரன், பரமக்குடி பால்வள தலைவர் முத்தரசு, முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன் உட்பட பலர் பாராட்டினர்.

Tags: ,

Leave a Reply