பதவி உயர்வு பெற்ற அரசுக்கிளை நல் நூலகருக்குப் பாராட்டு விழா

012பதவி உயர்வு பெற்ற அரசுக்கிளை நல் நூலகருக்குப்
                            பாராட்டு விழா
வந்தவாசி.ஜூன்.10. வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் மற்றும் கிளை நூலகப் பணியாளர்கள் சங்கம் இணைந்து பதவி உயர்வு பெற்றுச் செல்லும் வந்தவாசி அரசுக் கிளையின் நல் நூலகருக்கு பாராட்டு விழாவை நடத்தின.
    இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். விழாவில் பங்கேற்ற அனைவரையும் மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.

       வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நூலகராகப் பணியாற்றி, தமிழக அரசின் நல்நூலகர் விருதுபெற்ற நூலகர் கு.இரா.பழனி, பதவி உயர்வுப் பெற்று, பணி மாறுதலில் வேலூர் மாவட்டத்திற்குச் செல்கிறார். அவருக்கான பாராட்டு விழா வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட  வந்தவாசி பெட்ரோல் பங்க் உரிமையாளர் இரா.சிவக்குமார், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன், தெள்ளார் நூலகர் பெருமாள், கவிஞர் பா.சீனிவாசன், எ.தேவா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
     இவ்விழாவில், வந்தவாசி வட்டத்தைச் சேர்ந்த நூலகப் பணியாளர்கள் பலரும் பங்கேற்றனர். விழாவை வந்தவாசி அரசுக்கிளை மூன்றாம் நிலை நூலகர் ஜோதி, அலுவலக உதவியாளர் மு.இராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
    படக்குறிப்பு :
    வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் மற்றும் கிளை நூலகப் பணியாளர்கள் இணைந்து பதவி உயர்வு பெற்றுச் செல்லும் வந்தவாசி அரசுக் கிளையின் நல் நூலகருக்கு கு.இரா.பழனிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், வந்தவாசி பெட்ரோல் பங்க் உரிமையாளர் இரா.சிவக்குமார் நினைவுப் பரிசினை வழங்குகிறார். அருகில்,  நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் ஆகியோர் உள்ளனர்.
Tags: , , ,

Leave a Reply