பட்டுக்கோட்டை : ஆயிஷா ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் பயிற்சி மையம் தொடக்கம்

ஆயிஷா ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் பயிற்சி மையம் தொடக்கம்

பட்டுக்கோட்டை, ஜூலை 23
ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி, ஐ.ஏ.எஸ் /  ஐ.பி.எஸ் /  டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் தொடக்க விழா பட்டுக்கோட்டை கரிக்காடு எஸ்.எம்.எஸ் அவென்யூ வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவிற்கு ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி இயக்குநர் டாக்டர் எஸ். முகம்மது அஸ்லம் தலைமை வகித்தார்.

விழாவில் தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜே. லோகநாதன் கலந்துகொண்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசுகையில்;
மாணவ, மாணவிகள் உயர்ந்த இலக்கை அடைய திட்டமிடல் அவசியம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு விடா முயற்சி, கடின உழைப்புத்திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார். மேலும் பயிற்சி மையத்தில் புதிதாக இணைந்த மாணவிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில், ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா முன்னாள் மண்டல இயக்குநர் டாக்டர் ஜே. சதக்கத்துல்லா, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, கள்ளக்குறிச்சி ரேடியண்ட் அகதெமி அமைப்பாளர் ஆர். ரஹ்மத்துல்லாஹ், சீடு டிரஸ்ட் நிறுவனர் எஸ்.எம் இதயத்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

தொடக்கத்தில், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் முஹம்மது அப்துல் காதர் வரவேற்றார். நிகழ்ச்சியினை காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் மேஜர் எஸ்.பி கணபதி தொகுத்தார். ஆயிஷா ஐ.ஏ.எஸ் அகதெமி ஒருங்கிணைப்பாளர் சம்சுல் ஹுதா நன்றி கூறினார்.

விழாவில், காதிர் முகைதீன் கல்வி நிறுவன பேராசிரியர்கள், ஆசிரியர்கள். பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் பிரமுகர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி :
http://www.adirainews.net/2017/07/blog-post_59.html
Tags: , ,

Leave a Reply