நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!

rain2நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!
                                        (கீழை ஜஹாங்கீர் அரூஸி)
ஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர் நிலைகளை கட்டமைத்து ஒவ்வொரு வருடமும் தனது உழைப்பின் பயனை இத்தகைய நீர் நிலைகளில் சேமித்து வைத்து கோடை காலத்திலும் மக்களுக்கு உதவிய தண்ணீர் கொடையாளியான மழை இன்று உக்கிர கோபத்தில் கொந்தளித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி பகுதி முழுவதையும் தனது உக்கிர போராட்டத்தால் வெள்ளப்பகுதியாக்கி அங்குள்ள மக்களை மிரட்டி வருகிறது மழை.அந்த மக்கள் தான் நீர் நிலைப்பகுதிகளில் வீடு,கடைகள் போன்ற கட்டிடங்கள் கட்டி மழை நீர் ஒதுங்க முடியாத அவலநிலையை உருவாக்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் எத்தனையோ ஏரி,கண்மாய்,குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மக்களின் சுயநல கட்டிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் மழைநீர் ஒதுங்க இடம் இல்லாவிட்டால்  மழை நீர்  வேறு எங்கு போகும்?
வேறு வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் அதாவது மழை நீர் தங்கும் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்குள் தான் மழை நீர் தங்கும்.
அதன் செய்திகள் தான் தற்போதைய ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.
தான் ஓய்வெடுக்கும் நீர் நிலைப்பகுதிகளை கபளீகரம் செய்து விட்ட மனிதர்களின் மீதான கோபத்தில் இதுவரை 113 பேரை தமிழகத்தில் கொன்று விட்டது மழை.

இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லுவேன் என்றும் கொக்கரித்து வருகிறது.இந்த மழையின் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது அரசு இயந்திரங்கள்.
தனது முழு ஆளுமையை கொண்டு மழையின் வன்முறையிலிருந்து மக்களை ஓரளவு காப்பாற்றி விடலாம் என நினைக்கும் அரசு அடுத்த ஆண்டு மழையின் தாக்குதலை எப்படி எதிர் கொள்ள போகிறது?
மழையின் கோரப்பிடியிலிருந்து மக்களை முழுமையாகவும் நிரந்தரமாகவும் பாதுகாக்க வேண்டுமென்று அரசு இயந்திரங்கள் நினைக்குமானால்…உடனடியாக ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து ஏரி,கண்மாய்,குளங்களை கண்டெடுத்து அவைகளை கையகப்படுத்த வேண்டும்.
அவ்வாறு கையப்படுத்தும் நீர் நிலைப்பகுதிகளை தூர் வாரி,ஆழப்படுத்தி மழை நீர் செல்வதற்கான வழிகளையும் சீர்படுத்தி வைத்தால்…அடுத்த ஆண்டின் மழை மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் தனது இருப்பிடம் சென்று அமைதியாய் உறங்கும்.
மக்களும் நிம்மதியாய் உறங்குவர்.இதை சிந்திக்க வேண்டியது அரசு மட்டுமல்ல,பொதுமக்களும் தான்.
Tags: , , , ,

Leave a Reply