நீரில்லாத சித்திரங்குடி சரணாலயம் பறவைகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி கண்மாயில் ஏழு ஆண்டுகளாக தண்ணீர் இல்லாததால், பறவைகள் சரணாலயத்திற்கு வரும் உள், வெளிநாட்டு பறவைகள், மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவலம் தொடர்கிறது.

 

தமிழகத்தில் புகழ்பெற்ற சரணாலயங்களில் ஒன்றான சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பரில் கண்மாயில் தேங்கும் தண்ணீரில் கொண்டை ஊசி, கரண்டி மூக்கன், நத்தை, மீன் கொத்தி உட்பட நாரை வகைகளும், ரீங்காரத்திற்கு பெயர்பெற்ற “ஸ்பேரோ,’ சிட்டுக்குருவி, கொக்கு வகைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள், வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்யும். எட்டு மாதங்கள் கழித்து சொந்த இடங்களுக்கு திரும்பும். பறவைகளின் கூட்டத்தை பார்த்து ரசிக்கும் வகையில், பார்வையாளர் மேடை, நடந்து ரசிக்கும்வகையில், ஒரு கி.மீ., தூரத்திற்கு சிமென்ட் ரோடு, இனப்பெருக்கத்திற்காக கண்மாய்க்குள் சிறு குளம் என அனைத்து வசதிகள் அமைக்கபட்டுள்ளன.

 

சித்திரங்குடி கண்மாயில் ஏழு ஆண்டுகளாக தண்ணீர் தேங்கவில்லை. வனத்துறை சார்பில் அழிந்த கருவேல மரங்களுக்கு பதில் புதிய மரங்கள் வளர்த்தும் தண்ணீர் இல்லாததால், வெளி, உள்நாட்டு பறவைகள் ஏமாற்றமடைந்து, வேறு இடங்களில் தஞ்சமடைந்து, வேட்டைக்
காரர்களிடம் பலியாகின்றன. சரணாலயத்திற்கு செல்லும் ரோடு சேதமடைந்து, ஒற்றையடி பாதையாக மாறிவிட்டது. கண்மாய் கரையில் செல்லும் நிலையில், சரணாலயத்தை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் அவலம் உள்ளது.

 

சித்திரங்குடி கருப்புசாமி கூறும்போது: பறவைகள் நலனுக்காக, சித்திரங்குடி மக்கள், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

 

சரணாலயத்தை காக்க மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. பறவைகளை தங்களது குடும்ப ஜீவராசிகள் போல் பாவிக்கும் கிராம மக்கள், சரணாலயத்தில் பறவைகளின்றி வெறிச்சோடி காணப்படுவதால், கவலையில் உள்ளனர். கண்மாய்க்கு தண்ணீர் வர வரத்துக்கால்வாய்கள் அமைக்க வேண்டும், என்றார்.

Tags: , , , , ,

Leave a Reply