நீங்கள் எந்த கொள்கை? என்று கேட்பவர்களுக்கு எனது பதில்!

 

                               (கீழை ஜஹாங்கீர் அரூஸி)எனது ரப்பு அல்லாஹ்,எனது மார்க்கம் இஸ்லாம்,நான் படிக்கும் இறைவேதம் அல்குர் ஆன்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணலெம் பெருமானார்(ஸல்)அவர்களை எனது பெற்றோர்,மனைவி,குடும்ப உறவுகள்,எனது வீடு வாசல்,எனது உயிர் அனைத்தையும் விட அதிகமாக நேசிக்கிறேன்.

அண்ணலார் நேசித்த சஹாபாக்களை கண்ணியமாக நேசிக்கிறேன்.

சஹாபாக்கள் நேசித்த தாபியீன்களை உளப்பூர்வமாக நேசிக்கிறேன்.

தாபியீன்கள் நேசித்த தபஉ தாபியீன்களை இதயம் மகிழ நேசிக்கிறேன்.

தபஉ  தாபியீன்கள் நேசித்த மார்க்க மேதைகளை இங்கிதமாய் நேசிக்கிறேன்.

இத்தகைய ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்த எனது பெற்றோர்களையும்,ஆசிரியர்களையும் கடமையாய் நேசிக்கிறேன்.

Tags: , ,

Leave a Reply