நிழல்

நிழல்
=================================ருத்ரா
நிழல்
என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது.
நான் அசைத்தால்
அசையும் நிழல்..
அது அசைந்து என்னை
அசைத்துக்கொண்டேயிருக்கிறது.
இது என்ன விந்தை?
அந்த நிழல்
வெறி பிடித்து தலைவிரி கோலமாய்
எங்கோ ஓடுகிறது
நானும் அப்படியே ஓடுகிறேன்
அப்படியே
அது குபுக்கென்று
ஒரு கானல் நீர் கடலுக்குள்
விழுகிறது
நானும் விழுகிறேன்
அப்போது தான் அந்த மரண ஆழத்துக்குள்
பார்க்கிறேன்.
அது என்ன என்று.
அது யார் என்று.
அதன் முகம் தெரிகிறது.
அதன் குரூரமான கண்கள்
ரத்தம் கசியும்படி தூண்டிலை
என் மீது வீசி
என்னைப்பிடித்து இழுத்துக்கொண்டுபோவது
இப்போது தான் தெரிகிறது
அது எது…?
ஆம் அது ..ஆசை!
ஆசையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!
Tags: 

Leave a Reply