நாளையப் பொழுதை எதிர் நோக்கி

நாளையப் பொழுதை எதிர் நோக்கி
================================
என்னைக் கை
பிடிக்க வருபவனுக்காக
கட்டிய கனவு இல்லம்…!!

இல்லை என்று
சொல்லாமல்
என் அன்னை
கொடுத்த நிலம்..!!

வருமானம்
பற்றாமல்
வட்டிக்குப்
பெற்று கட்டி
முடிக்கப்பட்டது
பத்து அறையில்
கொண்ட
பகட்டான மாளிகை..!!!

மாப்பிள்ளை
என்று வரும்
முன்பே வைத்து
விட்டான் மறை
முகமாக பெரும்
தொகை சிலவு..!!

சிலவு என்று
கூற வழி இன்றி
சென்று விட்டது
இன்று…!!!

வட்டிக் காரன்
எட்டிப் பார்க்கும்
போது சட்டி பெட்டி
உருட்டுகிறார் அம்மா…!!!

மற்றவர்கள் எட்டிப்
பார்த்தால் மெருமை
பொங்க பதில்
கூறுகிறார்  நின்று..!!

வரதட்சணைக்காக
அடித்தலம் போட்டு
அழகாய் இருக்கின்றது
மாளிகை வீடு…!!!

அழகு பார்த்த
அத்தைக்கு
அளவு இல்லாப்
பூரிப்பு எல்லை
இல்லா அன்பை
அவிழ்த்து விடுகிறார்
என் முன்பு…!!

பிள்ளைக்கு
பல்லக்கு
வேண்டாம்
ஓட்டிச் செல்ல
ஒரு வண்டி
இது போதும்
சம்மந்திஎன்றார்..!!

ஓட்டாண்டியான
என் தாய் ஓட்டும்
வண்டி வாங்க
எங்கே போவார்..!!

விலை இல்லாக்
கண்ணீரை
வரவழைத்தார்
மதிப்பு இல்லாமலே
போனது மனம்
மரத்துப் போன பல முன்..!!

அம்மா கலங்கி  இருக்க
நான் தயங்கி இருக்க
வந்தவர்கள் தவம் இருக்க
மௌனம் களைத்தான்
பிச்சைக்காரன்…!!!

விடை பெற்று எழுந்த
மாப்பிள்ளையிடம்
ஒரு நொடி பேசினேன்..!!

பெண் என்று
நான்வரவா
பொன்னோடு
நான் வரவா…?

முடிவோடு நாளை வா
நாளையப் பொழுது
நமக்காக விடிவதா
இல்லை எனக்காக
விடிவதா என்று
சிந்தியுங்கள் என்றேன்
தலை கவுந்தார்கள்
வந்தவர்கள் தலை
நிமிர்ந்து என்னை
நோக்கினார் அம்மா..!!!

இப்போது நான்
நாளை வரை
எதிர்பார்க்கின்றேன்
அன்னை இல்லத்தின்
சிறப்பு எது வரையும் என்று…!!

ஆர் எஸ்  கலா
இலங்கை

Tags: ,

Leave a Reply