நான்

நான்

ஏதோசில கற்பனைகள்
என்னுள்ளே எப்போதும்!
மனிதவாழ்வே வேண்டாம்
மரமாய்ப்பிறக்க வேண்டும்நான்!

இளைப்பாறநிழல் கொடுத்து
இனியகனிகள் அளித்து,
பறவைகள் கூடமைத்துவாழ
பாதுகாளித்திட வேண்டும்நான்!

நீராகநான்மாறி உயிர்களின்
தாகம்தீர்த்திட வேண்டும்நான்!
காற்றாகமாறி அனைவரின்
சுவாசமாக வேண்டும்நான்!

கல்லாகமாறி உளியால்
சிலையாக வேண்டும்நான்!
அலையாகமாறி சமுத்திரத்தில்
சங்கமிக்க வேண்டும்நான்!

மலராய்ப் பிறந்து
மணம்தந்து உதிரவேண்டும்நான்!
நிலவாய் உதித்து
வளர்ந்து தேயவேண்டும்நான்!

கடவுளோர்நாள் வந்தென்னிடம்
கண்முன்னே தோன்றினால்,
ஈசலாகப் பிறந்து
ஓர்நாளில் பிறந்துமடியும்
வரமொன்று கேட்பேன்
நான்…..நான்!!

நான்,
காரைக்குடி. பாத்திமாஹமீத்
ஷார்ஜா.

Leave a Reply